TIRUNELVELI MU ::::: - A or Public Library & Readine வேலையே கிடையாது. எல்லாத் தோட்ட முதலாளிகளுக் குள்ளும் இப்படி ஒர் ஒப்பந்தம் இருக்கிறது. சட்டமும் இதற்கு மறைமுகமான ஆதரவு .ெ கா டு க் கி ற து. தொழிலாளி கங்காணியிடமிருந்து வாங்கிய கடனில் பாக்கி இருந்ததானல், அவனுக்குப் பற்றுச் சீட்டு I கிடைக்கும் நாள் எந்நாளோ? இவ்வாறு தொழிலாளியின் சுதந்திரம் கட்டுப்படுத்தப் பட்டபின் அவன் எதற்கும் வளைந்து கொடுத்து முதுகெலும் பை ஒடித்துக் கொண்டால் ஒழிய வாழ்வதற்கு வேறு வழி எது? தொழிலாளர் கடனப் பற்றி விசாரிக்க கமிஷனின் முன்பு, இந்தியத் தொழிலாளி கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலேயே மரிக்கிருன் என்று சொல்லப் பட்டது. இந்தக் கடன் எங்கிருந்து வருகிறது என்பதைப் பார்க்கிலும், கடன் படாமல் எப்படி இருக்க முடியும் என்பதை ஆராய்வதுதான் நலம். ஒரு கூலி கடனே வாங்காமல், ஊரிலிருந்து புறப்பட்டு இலங்கை செல்ல 15-நாளாகும். 16-வது நாளில் அவன் வேலைக்குப் போகும் முதல் நாளில் அவன் தலையில் ரூபாய் 20-க்குக் குறையாமல் கடன் நிற்கும். வழிப்பிரயாணச் செலவு, இலங்கை போனவுடன் சட்டி பானே முதலிய சாமான்கள் வாங்கிய வகையில் இந்தக் கடன் ஏற்பட்டுவிடும். பிள்ளையார் சுழி போடும் பொழுதே கடன் எனுமானல், முற்றுப்புள்ளி போடும்பொழுது எ ப் படியா கும் 2 இடையில் கலியாணம், இழவு, பொங்கல், தீபாவளி முதலியவற்றிற்கும், சொந்த ஊரில் ஏற்படும் நன்மை தின்மைகளுக்கும் செலவழிக்கும் பணமெல்லாம் கடகை வாங்கப்படுகிறது. கங்காணிகள் கடன் கொடுக்க மறுத்தால், எங்கள் பிள்ளை குட்டிகளாவது உங்களுக்கு 47
- Fis
- * Wதி'இடம்:ம்ெ: