பக்கம்:ஜெயில்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் தோன்றும். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் கையில் உள்ள குடையும் காலிலுள்ள செருப்பும். உண்மையில் இந்த இரண்டையும் வைத்து நாம் அவர்களுடைய வாழ்க்கையை நிதானித்துவிடக் கூடாது. இலங்கைக்குப் போகிறவர்கள், புறப்படும் பொழுதே, தி ரு ம் பி வருகையில் கொழும்புக் குடையும் செருப்பும் வாங்கி வரவேண்டும் என்று தீர்மானித்துக் கிெள்வது வழக்கம். பின்னல், அங்கு வசிக்கும்பொழுது இவ்விரண்டும் வாழ்க் கையின் லட்சியமாகிவிடும். தோட்டக்காடுகளில், சோ வென்று கொட்டும் மழையில், தலையில் ஒரு பீற்றல் கம்பளியைப் போட்டுக்கொண்டு சொட்டச் சொட்டப் பகல் முழுதும் நனைந்து வேலை செய்யும் தொழிலாளர் தான் குடையும் செருப்புமாகச் சில சமயங்களில் இங்கே மைக்கு காட்சி தருகின்றனர். இலங்கைத் தோட்டங்கள் மூன்று பிரிவாகப் பிரிக்கப் படுகின்றன: மேற்பகுதி, மத்திப்பகுதி, கீழ்ப்பகுதி. இவற்றில் மேற்பகுதி 4000, 5000 அடி உயரமுள்ள குன்றுகள் உள்ள பாகம். மற்ற இரண்டும் உயரத்தில் வரிசையாகத் தாழ்ந்தவை. மேற்பகுதியில்தான் அதிக மழை ; வேலை செய்வதும் ரொம்பக் கஷ்டம். எனவே, சம்பள விகிதங்கள் மேற்பகுதியில் இருந்து மற்றப் பகுதிகளுக்கு வரிசைக் கிரமமாகக் குறைக்கப்பட்டு இருக்கின்றன. 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/55&oldid=855510" இலிருந்து மீள்விக்கப்பட்டது