இந்தியத் தொழிலாளர் டாஸ்க் வாங்குவதை அறவே ஒழித்தாலன்றி ஏழைத் தொழிலாளரின் பொருளாதார நிலை மோசமாய்த்தான் இருக்கும். அரைப் பெயர், கால் பெயர் என்ற பித்த லாட்டங்களுக்கு இடமிருக்கும் வரை அவர்கள் மேலாக வுள்ள பிறருக்கு அடிமைகளாகவே இருக்க நேரும். மற்ருெரு விபரீதம் என்ன வென்ருல், கோட்டங் களில் தேயிலே ராளமாய் விளைந்திருந்து, பறித்த தேயிலைக்கும் நல்ல விலை இருந்தால்தான் தொழிலாளர் களுக்கு இடைவிடாத வேலே இருக்கும். கோட்டத்தில் வேலையில்லே என்ருல் தொ ழிலா ளருக்குச் சம்பளமும் இல்லை. நாட்டை விட்டு, வெளி நாட்டில், தங்கள் உழைப்பை வைத்தே ஜீவிக்க வேண்டியவர்களுக்கு, வேலையும் சம்பளமும் இல்லாவிட்டால் என்ன செய்ய முடியும்? இரவு 7 - மணி, 8-மணி வரையிலும் சில கோட்டங் களில் வேலை வாங்கப்படுகிறது. நடுங்கக்கூடிய குளிர்ச்சி யான மலைச் சரிவுகளில் இப்படி வேலை செய்துவிட்டுத் திரும்பும் தொழிலாளரை நாம் ரஸ்தாக்களிலேயே சந்திக்கக் கூடும். காலையில் எழுந்து பரேட் டுக் களத்தில் (Parade ground) ஆஜர் கொடுப்பதிலிருந்து இரவிலும் வெகு நேரம் வேலை செய்வதையாவது அரசாங்கம் கண்டிப்பாகத் தடுக்கவேண்டும். உலகெங்கும் ஆலைத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தக்க சங்கங்களை வைத்துக்கொண்டு இருக்கின்றனர். அந்தச் சங்கங்களினுல்தான் அவர்க ளுக்கு வலிமை யுண்டு. அவர்களே ஐக்கியமாகக் கட்டிப் 53
பக்கம்:ஜெயில்.pdf/58
Appearance