பக்கம்:ஜெயில்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியத் தொழிலாளர் கோட்டத்தில் களவு நடந்தால் மூலை முடுக்குகளில் எல்லாம் போலிஸ் ஸ்டேஷன்கள் இருக்கின்றனவே! அதெல்லாம் காரணம் இல்லை. தொழிலாளர் சார்பாக உழைக்கும் யாரும் உள்ளே புகாமல் இருக்கவே இந்தப் போர்டுகள் பயன்படுகின்றன. தோட்டம் சொந்த நிலமாம். உண்ம்ைதான் ; தோட்டம் சொக்தமால்ை சொந்தக்காரரே உ ைழ த் து ப் பயிரிடுவதுதானே ! எப்பொழுது தேச மக்களில் ஆயிரக் கணக்கானவரின் உழைப்பை வைத்துத் தோட்டத்தைச் செழுமைப்படுத்த அவசியம் ஏற்பட்டதோ, அப்பொழுதே அந்த மக்கள் சார்பாகத் தோட்டக்காரருக்குச் சில பொறுப்புக்களும் ஏற்பட்டுவிடுகின்றன. தொழி லா ளர் நலனுக்காக உழைப்பவர்கள் அவர்களைச் சந்திக்கவே முடியாமல் செய்துவிடுவது அப் பொறுப்புக்களே நிறைவேற்றுவ தாகாது. தொழிலாளர் தோட்டக்காரருடைய நிலத்தில், அவர்கள் கட்டிக் கொடுக்கும் லைன் களில்தான் வசிக் கின்றனர். எங்கள் நிலத்தில், எங்கள் வீடுகளிலே தங்கிக்கொண்டு, எங்களுக்கு விரோதமாய்க் கிளம்புவ தற்கு நாங்கள் சம்மதிப்போமா ? என்று சொன்னல், அதற்குப் பொருளே யில்லை. இடம், விடெல்லாம் தோட்டக்காரரின் லாபத்திற்காக அமைத்துக் கொடுக்கப் பட்டவையே தவிர வேறில்லை. வீடுகள் இல்லாவிட்டால் தொழிலாளர் குளி ரி ல் விறைத்துக் கிடப்பார்கள். மறுநாள் தோட்ட வேலைகள் யாரை வைத்து நடக்கும்? ஆதலால், பிரசித்தி பெற்ற இந்தியர்களும், தலைவர்களும், தொழிலாளர் நலனைக் கவனிப்பவர்களுமாவது தோட்டங் களுக்குச் செல்ல உரிமை இருக்க வேண்டும். அதற்காகப் போதிய கிளர்ச்சி செய்ய வேண்டியது அவசியமாக 55 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/60&oldid=855522" இலிருந்து மீள்விக்கப்பட்டது