பக்கம்:ஜெயில்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியத் தொழிலாளர் தோட்டங்களிலே சூப்பிரண்டுகளுக்கு அடுத்த படியாக, கங்காணிகள், கண்டாக்குகள் (Conductors), கணக்குப் பிள்ளைகள், டீ மேக்கர்கள் முதலியோர் இருக் கின்றனர். கடைசிப் படியில் தொழிலாளர்கள். அவர்கள் இலங்கைக்கு வ. வோ, அங்கிருக்கவோ காரணமான வர்கள் கங்காணிகள். முன் காலத்தில் கங்காணிகளுக்கு நல்ல செல்வாக்கு இருந்திருக்கிறது. சீமையிலிருந்து ஒன்றும் தெரியாமல் இலங்கை வந்து சேரும் சின்னத் துரைமார்கள் எல்லாக் காரியங்களுக்கும் அவர்கள் தயவையே எதிர்பார்த்திருந்தனர். இப்பொழுது துரை மார்களின் செளகரியம் போல் எல்லாம் கங்காணிகள் நியமிக்கப்படுகின்றனர். கங்காணிக ளையும் மேல் பார்க்க கண்டாக்குகள் மாதச் சம்பளத்திற்கு நியமிக்கப் படுகின்றனர். கண்டாக்கு களும் கங்காணிகளும் எப்பொழுதும் ஒத்துப் போவதில்லை. தொழிலாளருக்கும் இவர்களுக்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. கொழி லாளரும் கொஞ்சம் கொஞ்சம் விழிப்படைந்து வருவ தாலும், தோட்டங்களிலேயே பிறந்து வளர்ந்த பல வாலிபர்கள் கூடியவரை முயன்று பிரசாரம் செய்வ தாஅம், சட்டசபைத் தேர்தல்களினலும், தொழிலாளர் இடையே விழிப்பு ஏற்பட்டு வருகிறது. தொழிலாளர் - கங்காணி - கண்டாக்கு முரண்பாடுகள் இரு க்கு ம் 6), 60). ДГ துரைமார்களுக்கு நன்மைதான். இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால்தான் அவர்களுக்கு ஆபத்து. தொழிலாளரின் அறியாமையும், கங்காணிகளின் சுயநலமும், இவர்களோடு கண்டாக்கு ’ களுக்குச் சம்பந்தமின்மையும் நிலைத்திருக்கத் துரைமார் வேண்டிய ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர். 57 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/62&oldid=855526" இலிருந்து மீள்விக்கப்பட்டது