உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியத் தொழிலாளர் தான் சிங்கள ராஜீயத் தலைவர்கள். இவர்கள் அடிக்கடி சட்ட சபைகளிலும், பொதுக் கூட்டங்களிலும் இந்தியர் களைப் பற்றித் தாறுமாருகப் பேசுவார்கள். நமது . தோட்டங்களில் எல்லாம் இனி நம்மவர்களுக்கே வேலை கொடுக்கும்படி செய்யவேண்டும் 1’ என்று இவர்கள் வானமளாவப் பேசுவார்கள். இவர்களுக்கும் சிங்களப் பொது ஜனங்களுக்கும் அதிகத் தொடர்பு கிடையாது. அதல்ைதான் இவர்களுடைய துவேஷப் பிரசாரம் பொது மக்களிடையே அதிகம் ஊடுருவிப் பாயவில்லை. இத்தனை நாளாகச் சிங்களவர்கள் என்ன செய்துகொண்டு இருங் தார்கள் ? அவர்கள், இந்தியர்களைப் போல், அவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்ய மாட்டார்கள். இயற்கைச் செழிப்பு வாய்ந்த இலங்கையிலேயே வாழ்ந்து வந்ததால் அதிக வேலை செய்யும் சுபாவம் அவர்களிடம் இல்லை. தவிரவும், அவர்கள் வீடுகளை விட்டுத் தோட்டக் காடுகளில் சென்று வசிக்க மறுப்பார்கள். அப்படியே வசித்து வேலை செய்ய இசைந்தாலும், குறைந்த கூலிக்கு அதிக வேலை செய்ய மாட்டார்கள் ; இழைக்கப்படும் கொடுமைகளை யெல்லாம் கலை வணங்கித் தாங்கிக்கொண் டிருக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் நம்மவர் களுடன் சேர்ந்து தோட்டங்களில் வேலை செய்தாலாவது ஈம்மவர்களுக்கும் ரோஷமும் குடும் உண்டாகும். அப்புறம் கவலையில்லை என்று தொழிலாளருக்காக உழைத்து வரும் ஓர் அன்பர் கூறுவது வழக்கம். ஆனல், சிங்களவர்களில் பெரும்பாலார் தோட்டங்களில் வேலை செய்வது துர் ல ப ம ன விஷயமே. நம்மவர்களும், எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், இலங்கையில்தான் இருப்பார்கள். ஏனெனில், அவர்களில் பெரும்பாலார் 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/64&oldid=855531" இலிருந்து மீள்விக்கப்பட்டது