இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கட்டுரைகள் இலங்கையிலே பிறந்து வளர்ந்த இலங்கையர்தானே! ,மேலும், இலங்கைக்குச் சென்ற தொழிலாளர்கள் இங்கு உள்ள வறுமையைத் தாங்கமாட்டாமல்தானே, வருவது வரட்டும் என்று போனர்கள் ! மேலே சொல்லப்பட்ட பூரி. ரங்கசாமிக் கங்காணி சொல்வதுண்டு : நாங்கள் இந்தியாவுக்கு வரும்பொழுது, இந்தக் கங்காணி வர மாட்டாரா இலங்கைக்குக் கூட்டிக்கொண்டு போக : ' என்று ஜனங்கள் காத்துக்கொண்டே யிருப்பார்கள்." காய்கின்ற சட்டியில் கிடந்து வதங்குகிறவர்களுக்கு ஒரு மாறுதல் வேண்டும் என்று கோன்றுவது இயல்பே. ஆனல், கடைசியில், மாறுதல் வேண்டியது, சட்டியில் இருந்து அடுப்பில் குதித்தது போல் இருக்கிறது)