பக்கம்:ஜெயில்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் உள்ளமும் ஆன்மாவும் விடுதலை அடைவதற்காக, ஆசிரியர் தம் உடலைக்கூட அடிமைப்படுத்தி வைக்க நேரிடும். தேசியப் பத்திரிகையே அதிகாரிகள் கண்ணில் துரும் பாகக் குத்திக் கொண்டிருக்கும். வருஷக் கணக்காக அதிகாரிகள் கட்டிவரும் கோட்டைகளை, ஒரே நாளில், ஒரு தேசியப் பத்திரிகை உடைத்துத் தள்ளி விடுவது என்ருல், யார்தான் பொறுத்துக்கொண்டு இருக்க முடியும்? இக் காரணத்தால், நம் தேசத்தில், பல சமயங் க்ளில் விலங்கிடப்பட்ட கைகளே அநேகம் பத்திரிகை களில் எழுதி வருகிறதைத் தினமும் பார்க்கிருேம். நம் பத்திரிகை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்களில் அநேகர் சிறை சென்று மீண்டவர்கள். பிற நாடுகளைப் போல், தினந்தோறும் சிறிது நேரம் மேஜையருகே அமர்ந்து பேனவை ஒட்டிவிட்டுப் பெரும் பணம் சம்பாதிப்பது இங்கே கடக்க முடியாத காரியம். ஒரு முறை பேனவை ஒட்டு முன்பு, அதல்ை வரக்கூடிய விபத்தை ஆசிரியர் ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருக்க வேண்டும். ஆசிரியர் தலைக்கு மேலே மெல்லிய நூலில் ஒரு வாள் தொங்கிக்கொண்டே யிருக்கும். நூல் அறுந்து வாள் எந்த நேரத்திலும் அவர் தலைமேலே விழுந்து விடக்கூடும். அதற்காக, அவர் தலை கிமிர்ந்து, வாளையே பார்த்துத் திகைத்துக் கொண்டிருந்தால், பேணு ஒடாது, பத்திரி கையும் வராது. பெரு முயற்சி செய்து அவர் எழுதின அலும், எழுத்துக்கள் அவருடைய கோழைத்தனத்தின் சித்திரங்களாகவே இருக்கும். நாடும் நகரும் அவை களைப் பார்த்துச் சிரிக்கும். பொது ஜனங்கள் வீரத் தையும் வெற்றியையுமே வழிபடுவார்கள். ஆசிரியர் விரமாக எழுதவேண்டும்; வெற்றிக்கும் வழி காட்ட 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/67&oldid=855536" இலிருந்து மீள்விக்கப்பட்டது