ஆசிரியர் பரம்பரை வேண்டும். தலைக்கு நேரே தொங்கும் வாளே அறவே மறந்துவிட்டால்தான் இது சாத்தியமாகும். இல்லாவிட்டால், அரசாங்கத்தை முழுதும் ஆதரித்து, அதிகாரிகளுடைய அதிக்கிரமங்களைப் பூசி மெழுகிக் கொண்டு இருக்கலாம். இதல்ை பத்திரிகை அடக்கு முறை ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனல், பொது ஜனங்கள் பத்திரிகையைக் கையால் தீண்ட மாட்டார்கள். எனென்ருல், பத்திரிகை வெறும் சர்க்கார் கெஜட்டாகத்தானே இருக்கும்! அமிர்த பஜார் பத்திரிகை முதலில் கூறிய வழியைப் பின்பற்றி, எல்லையற்ற துன்பங்களைத் தாங்கித் தப்பிப் பிழைத்திருக்கிறது. 76 - வருஷமாக, 1868-ம் வருஷத்தி விருந்து இன்று வரை, அது பொதுஜனக் கொண்டு' செய்து வருகிறது. அதன் ஆசிரியர்களான கோஷ்' குடும்பத்தார் இந்திய நாட்டின் தேசிய கெளரவத்தை இந்த 76 - வருஷமாகக் காத்து வந்திருக்கிருர்கள். ஒரு பத்திரிகைக்கோ, ஒரு குடும்பத்திற்கோ, பெருமைப்படத் தக்க விஷயம் இதைவிட வேறு என்ன வேண்டும்? அமிர்த பஜார் என்பது வங்காளத்திலே ஒரு பட்டிக் காடு. அங்கேதான் கோஷ் குடும்பம் வசித்து வந்தது. அந்தக் குடும்பத்தில் வசந்த குமார் கோஷ், ஹேமந்த குமார் கோஷ், ஸிஸிர் குமார் கோஷ், மோதிலால் கோஷ் என்ற நான்கு சகோதரர்கள் இருந்தார்கள். இவர்களில் வசந்த குமார்தான் முதலில் ஒரு பத்திரிகை ஆரம்பித்து நடத்த வேண்டும் என்று எண்ணங் கொண்டார். அவருடைய கையிருப்புத் தொகை ரூபாய் 3001 அரைப் 63
பக்கம்:ஜெயில்.pdf/68
Appearance