பக்கம்:ஜெயில்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் கொண்டு, பின்னல் தேசீயவாதிகளாக முன் வந்தார்கள். இதுபோலவேதான் மெட்ராஸ் மெயி லும் ஒருவகையில் தேசத் தொண்டு செய்து வந்திருக்கிறது. சில சமயங் களில் பரம ராஜவிசுவாசிகள்கூட அதைப் படித்து, வெறுப்படைந்து, தேசீய அபிமானம் கொள்வதுண்டுe 1871-ல் அமிர்த பஜார் கல்கத் தாவிலிருந் து வெளியிடப்பட்டது. ஸிஸிர் குமாருக்குத் திடீரென்று 800 ரூபாய் கிடைத்திருந்தது. அதில் 600 ரூபாய்க்கு ஒரு புது அச்சு இயந்திரத்தை வாங்கினர். பத்திரிகை ஆங்கிலமும் வங்காளியும் கலந்த வாரப் பதிப்பாக வெளி வந்தது. நாள்தோறும் அதன் செல்வாக்கு வளர்ந்து கொண்டே வந்தது. ஜனங்கள் அதை அன்புடனும் ஆதரவுடனும் பாராட்டினர்கள். தயவு காட்சண்ய மில்லாமல், பத்திரிகை நீதி நிறைந்த நெடுங் கர்ம நெறியில் கடந்து வந்தது. அடிக்கடி அதிகாரிகளுடைய தவறுதல் களே அது கண்டித்து வந்தது. ஒரு சமயம், ஒர் ஐரோப்பிய டிப்டி மாஜிஸ்திரேட் ஒரு ஸ்திரீயை மானபங்கம் செய்த தாகப் பத்திரிகையில் செய்தி வந்தது. இதற்காக அதிகாரிகள் வழக்குக் கொடுத்தார்கள். பத்திரிகையை அச்சிட்டவரும், செய்தியை எழுதியனுப்பியவரும் தண் டிக்கப்பட்டனர். ஸிஸிர் குமார் மட்டும் தண்டனையில் இருந்து தப்பினர். அமிர்த பஜார் என்ருலே அதிகாரி களுக்குப் பயமாகிவிட்டது. அன்று முதல், அல்லம் பட்டு அழுபவர்களின் கண்ணிரைத் துடைப்பதும், அக்கிரமங்களை அம்பலத்திற்குக் கொண்டுவருவதும், தேச மக்களைத் தட்டி எழுப்புவதும், முதலாளிகளுக்கு எதிராக o 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/71&oldid=855547" இலிருந்து மீள்விக்கப்பட்டது