பக்கம்:ஜெயில்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் பரம்பரை உழைப்பாளரின் நலனுக்காக உழைப்பதும் பத்திரிகை யின் தொழிலாக விளங்கின. விட்டன் பிரபு இந்தியாவுக்கு வைஸ்ராயாக வந்த பின்பு, பத்திரிகைகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த லெ யோசனைகள் செய்யப்பட்டன. அச்சமயம் ஸர் ஆஷ்லி ஈடன் வங்காளத்தில் லெப்டினன்ட் கவர்னராக இருந்தார். அவர் ஸிஸிர் குமாரை அழைத்து, நேரில் சில விஷயங்களைப் பேசினர். எப்படியாவது அமிர்த பஜாரை 'க் கைவசப்படுத்தி, அதை அரசாங்க ஆதரவாக கடக்கும்படி செய்துவிட வேண்டும் என்பது அவர் ஆவல். பத்திரிகையை அச்சிடுவதற்கு முன்னல், முக்கியமான விஷயங்களைத் தம்மிடம் காட்டிக்கொள்ள வேண்டும் என்றும், எந்த விஷயங்களைப் பற்றி எழுதிலுைம் எப்படி எழுத வேண்டும் என்பதைப் பற்றித் தம்மிடம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆசிரியரிடம் கூறினர். ஸிஸிர், தம் கண்களையும் காதுகளையும் கம்பாமல் திகைத் தார். ஒரு வீர தேசீயப் பத்திரிகாசிரியரிடம் ஒரு கவர்னர் இப்படிப் பேசுவது உண்மையாக இருக்குமா என்று அவர் சந்தேகப்பட்டார். கவர்னர் கூறியது உண்மைதான். அப்படி நடக்கவேண்டும் என்றே அவர் விரும்பினர். ஸிஸிர் இணங்கவில்லை. உடனே வர் ஆஷ்லியின் முகம் மாறிவிட்டது. கோபத்தால் அவர் குமுறினர். ஆசிரியர் ஏன் தம் கருத்துக்கு இணங்க முடியாது என்று அவர் கேட்டார். ஸிஸிர், நிதானமாக ஒரு பதில் கேள்வி கேட்டுவிட்டுத் திரும்பிவிட்டார் : லெப்டினன்ட் கவர்னர் அவர்களுக்கு இந்தத் தேசத்தில் 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/72&oldid=855549" இலிருந்து மீள்விக்கப்பட்டது