பக்கம்:ஜெயில்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் கண்யமான ஒரு பத்திரிகாசிரியன்கூட இருக்கக்கூடாது என்று உத்தேசமா? 1878-ல் சுதேச பாஷைப் பத்திரிகைகளின் சட்டம் என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டது. தேச பாஷைப் பத்திரிகைகளுக்கு இதல்ை மிகுந்த சங்கடம் ஏற்பட்டது. வங்காளத்தில் அமிர்த பஜார் பத்திரிகை ஒன்றுக் காகவே இந்தச் சட்டம் அமுல் நடத்தப்பட்டதோ என்று எண்ணும்படி இருந்தது. சட்டம் மார்ச் மாதம் 14-ம் தேதி நிறைவேறியது. அமிர்த பஜா ரின் அடுத்த இதழ் 21- ம் தேதி வெளி வர வேண்டியிருந்தது. அன்று பத்திரிகை முழுதும் ஆங்கிலப் பத்திரிகையாக வெளி வந்துவிட்டது! சட்டம் தேச பாஷைப் பத்திரிகைகளுக் குத்தானே! அமிர்த பஜார். ஆங்கிலப் பத்திரிகையாகி விட்டது. பாஷை ஆங்கிலமே தவிர, விஷயம் எல்லாம் பழைய அக்னி அஸ்திரங்கள்தான். பின்னல், ரிப்பன் பிரபு வைஸ்ராயாக இரு ந் த பொழுது, 1881-ல் மேலே கூறிய கொடிய சட்டம் வாபஸ் வாங்கப்பட்டது. பிற்போக்கான ஐரோப்பியர் களின் எதிர்ப்பை யெல்லாம் எதிர்த்துத் தகர்த்து, ரிப்பன் பிரபு பிடிவாதமாக நின்று சுதேசப் பத்திரிகைகளின் வாய்ப்பூட்டைத் திறந்து வைத்தார். 1885-ம் வருஷம் காங்கிரஸ் மகாசபை தோன்றியதி லிருந்து பத்திரிகைகளுக்கு நல்ல காலம் பிறந்தது. தேசீய இயக்கத்தைப் பத்திரிகைகள் வளர்த்தன; இயக்கமும் பத்திரிகைகளுக்கு உற்ற துணையாக இருந்து வந்தது. காங்கிரஸ் தோன்றுமுன் தோன்றியது அமிர்த பஜார் ". 68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/73&oldid=855550" இலிருந்து மீள்விக்கப்பட்டது