பக்கம்:ஜெயில்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் பரம்பரை ஆளுல், காங்கிரஸ் செய்ய வந்த வேலையையே அது செய்து வந்தது. உலகம் எல்லாம் இருள் சூழ்ந்திருக்த பொழுது, நம் வேதங்கள், தெய்வம் ஒன்றுதான் ; அறிஞர்கள் அதைப் பல பெயரிட்டு அழைக்கிருர்கள் : என்று ஞானச் சுடரைப் பரப்பியதாகச் சொல்லுகிருேம். இதுபோலவே, இந்தியா முழுதும் அரசியல் வானத்தில் இருள் சூழ்ந்திருந்த பொழுது, ! அமிர்த பஜார் போன்ற சில பத்திரிகைகளே வழிகாட்டி வந்தன என்று சொல்ல வேண்டும். அமிர்த பஜா ரின் சார்பாக மோதிலால் கோஷ் அநேகமாக ஒவ்வொரு காங்கிரஸ் கூட்டத்திற்கும் விஜயம் செய்திருக்கிரு.ர். மீன் குஞ்சுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா ? மோதிலால் உயிரோடு இருந்தவரை தம் பத்திரிகையைக் காங்கிரஸின் கோட்டையாக அமைத்துப் பாதுகாத்து வந்தார். நாளுக்கு நாள் தேசீயப் பிரச்னைகள் பெருகி வந்தன. தேசிய எழுச்சியும் ஜ்வாலையுடன் வீசி வளர்ந்து வந்தது. அந்த நிலையில், அரசாங்கம் ஹிந்து விவாக சம்பந்தமாக ஒரு சட்டம் இயற்ற முன் வந்தது. பெண்களின் சம்மத வயது) 12-க்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்பதே சட்டத்தின் கருத்து. பால கங்காதர திலகர் முதல் தேசத் தலைவர்கள் அனைவரும், தேசீயப் பத்திரிகை களும், அரசாங்கம் மத விஷயங்களில் தலையிடுவதை விரும்பவில்லை. எங்கும் எதிர்ப்பு ஏற்பட்டது. ஒரே வாரத்தில் அமிர்த பஜார் தினசரிப் பத்திரிகையாக மாற்றப்பட்டது. 1891-ம் u பிப்ரவரி மீ" 19 வட அத் தினசரியின் முதல் இதழ் பிரசுரமாயிற்று. கல்கத்தாவில், ஆனந்த சட்டர்ஜி சந்தில், 2-ம் நெம்பர் கட்டிடத்தில் 69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/74&oldid=855553" இலிருந்து மீள்விக்கப்பட்டது