ஆசிரியர் பரம்பரை ரஷ்யப் பத்திரிகைகளில் வெளியிட ஏற்பாடு செய்து வந்தது. ஒர் இந்தியப் பத்திரிகையிலிருந்தே விஷயங்களை எடுத்துப் பிரசுரித்து ஆங்கிலேயருக்கு எதிராக ரஷ்ய அரசாங்கம் பிரசாரம் செய்து வ்ந்தது என்பதைக் கண்டு இந்திய சர்க்கார் மனம் புழுங்கியது. பத்திரிகையின் ஆசிரியரைக் கூப்பிட்டுப் பேசியதில், அவர் ரஷ்ய அரசாங் கத்தின் சந்தாவை இழக்கத் தயாராக இல்லை என்று சொல்லிவிட்டார். 1883-ம் வருஷம் இல்பர்ட் மசோகா சம்பந்தமான கிளர்ச்சியிலும் அமிர்த பஜார் தலைமை வகித்து நின்றது. அதற்கு முன்னல் இந்திய மாஜிஸ்திரேட்டுகள் ஐரோப்பியர்களை நீதி விசாரணை செய்ய அதிகாரம் இல்லாமல் இருந்தார்கள். ஐரோப்பிய நீதிபதிகளுக்கும் இந்திய நீதிபதிகளுக்கும் இடையே இருந்து வங்க இந்த வேற்றுமையை ஒழிக்க வேண்டும் என்று சட்ட அங்கத் தினர் ஸர் கோர்ட்னி இல்பர்ட் இந்த மசோதாவைத் தயாரித்திருந்தார். உடனே வங்காளத்திலிருந்த ஆங்கி லேயர் எல்லோரும் ஒன்று சேர்ந்து எகமாகக் கூச்சல் போட ஆரம்பித்தனர். சுதேசிகளை வாய்க்கு வந்தபடி எசலாயினர். மசோதா சட்டமானல், சிங்கத்தைப் பார்த்து காய் கு ைர க் க ஆரம்பித்துவிடும் என்று எச்சரிக்கை செய்தனர். வங்காளிகளும் விடவில்லை. விழித்துக்கொ ண்டு எழுந்து நின்று போராடினர்கள். உண்மையான சிங்கமாக இருந்தால் நாய் அதைக் கண்டு பயப்படும். ஆனால், கழுதை சிங்கத்தின் தோலைப் போர்த்திக்கொண்டு நின்ருல், நாய் அதைப் பார்த்துக் குரைக்கவும் செய்யும், கடிக்கவும் செய்யும் 1’ என்று 71
பக்கம்:ஜெயில்.pdf/76
Appearance