உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் வங்காளி பாபுக்கள் பதிலுக்கு கர்ஜித்தார்கள். தேசியப் பத்திரிகைகளும் பெரும் போர் தொடுத்தன. நீதி விசாரணையில், பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ள மறுத்து, ஆங்கிலேயருக்கு என்று தனியாக வெள்ளைக் கார மாஜிஸ்திரேட்டுகள் வேண்டும் என்று கேட்பவர்கள் வெறும் கோழைகள் என்று அமிர்த பஜார் ஆணித் தரமாக எழுதிற்று. மசோதா பின்னல் வாபஸ் வாங்கப் பட்ட போதிலும், இந்தியர் எ திர்ப்பின் ருசியை அதிகாரிகள் ஒர் அளவு அறிந்துகொள்ள இந்த இயக்கம் உதவியாக இருந்தது. 1896-ல் பம்பாயில் பஞ்சமும் பிளேக் நோயும் ஏற்பட்ட சமயத்தில் அமிர்த பஜார் அம் மாகாணத்து மக்களுக்காக அருமையான ஊழியம் புரிந்து வந்தது. லோகமான்ய திலகருக்கு அது சொந்தப் பத்திரிகை மாதிரி விளங்கியது. அவர் கல்கத்தா சென்ற பொழு தெல்லாம் அப் பத்திரிகாலயத்தில்தான் தங்குவது வழக்கம். வங்காளப் பிரிவினைக் காலத்திலும், காந்திஜியின் சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு முதலிய இயக்கங்களிலும் அமிர்த பஜார் அரும் பெரும் ஊழியம் புரிந்து வந்திருக் கிறது. சுதேச சமஸ்தானங்களுக்கும் அது ஆப் த நண்பனக இருந்து வருகிறது. அதிகார வர்க்கத்தின் கொடுமைகளுக்கு ஆளான பரோடா மகாராஜா, ரீவா மகாராணி, போபால் பீகம், காஷ்மீர் மகாராஜா முதலி அவர் யோர் துன்பப்பட்ட சமயங்களில் பத்திரிகை களின் களைகண்ணுக விளங்கியது. அதர்மம் மலிந்து, தர்மம் நசித்துப் போகும்போது, பகவான் அவதரிப்பார் என்று நாம் நம்புவது வழக்கம். 72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/77&oldid=855559" இலிருந்து மீள்விக்கப்பட்டது