ஆசிரியர் பரம்பரை ஆகுல், இன்த இருபதாம் நூற்ருண்டில், பகவான் சங்கு சக்கரம், மழு ஒன்றும் ஏந்தி வருவதில்லை; நல்ல பேனு ஒன்றையே எந்திக்கொண்டு, அவர் பத்திரிகாசிரியராகவே அவதரிக்கிருர் என்று சொல்லலாம். ஜனங்களின் சுதக் திரம், தர்மத்தின் பாது காப்பு எல்லாவற்றிற்கும், வீரருடைய வாளைக் காட்டிலும், பத்திரிகாசிரியருடைய பேணுவே மிகச் சிறந்த பாதுகாப்பாக விளங்குகிறது. இவ்வளவு உத்தமமான உன்னதமான தொழில் பூரண சுதந்திரத்துடன் விளங்க வேண்டும் என்பதே ஒவ்வொரு நாட்டின் கோட்பாடாகும். எந்த காட்டில் எழுத்துச் சுதந்திரம் (பத்திரிகைச் சுதந்திரம்) இல்லையோ, அந்த நாட்டில் வேறு எந்தச் சுதந்திரமும் நிலைக்காது. பத்திரிகைச் சுதந்திரத்திற்கு இரண்டுவித இடையூறுகள் ஏற்படலாம். ஒன்று அதிகார வர்க்கத்தின் மூலம் வரும்; மற்றது பத்திரிகை முதலாளிகளின் மூலம் வரும். வெறும் பண ஆசை கொண்டு, ஒரு கொள்கையும் இல்லாது அலேயும் முதலாளிகளிடம் உண்மையான பத்திரிகாசிரியர் வேலை பார்ப்பதைப் போன்ற துர்ப்பாக்கியம் வேறில்லை. அப்படிப் பார்க்கவும் கூடாது. வெறும் பண மூட்டை களையே எதிர்த்து வெல்ல முடியாக ஆசிரியர், கோடிக் கணக்கான மக்களின் சுதந்திரத்திற்காக எ ப் ப டி ப் போராடுவார் ? வல்லமை மிகுந்த அரசாங்கங்களையும், படைகளையும், ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்து அவர் பேளு என்ன செய்துவிட முடியும்? அமிர்த பஜார் பத்திரிகை இந்திய ஆசிரியர்களுக் ஒரு வழிகாட்டி. அமிர்த பஜார் பத்திரிகைக்கு ஜே1. என்ருல், சத்தியத்திற்கு ஜயம், தியாகத்திற்கு ஜயம், இந்திய தேசீயத்திற்கு ஜயம், சுதந்திர தேவிக்கு ஐயம் என்றே கருத வேண்டும். 78
பக்கம்:ஜெயில்.pdf/78
Appearance