தேசிய மறுமலர்ச்சி அடித்தளம் கட்டியவர். பின்னர் வந்த கவர்னர்களும் வைஸ்ராய்களும் அவர் ஆரம்பித்த வேலையை முடித்து வைத்தனர். இவ்வாறு கிழக்கிந்தியக் கம்பெனியின் வரவு செலவு கோஷ்பாராவின் ஆதாயக் கணக்கில் சுமார் 2,000 மைல் நீளமும் அகலமும் உள்ள பாரத தேசம் சேர்ந்துவிட்டது. இந்தியாவின் சரித்திரம் என்னும் சமுத்திரத்தில் ஆங்கில ஆதிக்கம் ஒரு துளியே ஆகும். பாரசீகம், அnரியா, மிசிரம் முதலிய நாடுகள் நாகரிகத்தில் தலைமை வகித்து விளங்கியது போல், இந்தியாவும், உலக நாக ரிகத்தின் உச்சத்தை அடைந்து, பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றது. அந்த நாடுகள் எல்லாம் வீழ்ந்து ஒழிந்தன. ஆல்ை, இந்தியா இன்றும் அழியாது தலை நிமிர்ந்து நிற்கின்றது. அதன் சரித்திரத்தின் பெரும் பாகம் பழமையில் மறைந்து கிடக்கின்றது. ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வரும்பொழுது இந்தியா அநாகரிக மக்களின் அன்னையாக விளங்கவில்லை. உலகிற்கு நாகரிகம் புகட்டிய உத்தம நாடாகவும், சகல வளங்களும் நிறைந்து செல்வம் கொழிக்கும் நாடாகவும் திகழ்ந்தது. சரித்திர பூர்வமாக சுமார் 7,000 வருஷங்களுக்கு இந்தியாவின் வாழ்வு தெளிவாய்ப் புலனுகின்றது. எனவே, ஆங்கி லேயர் ஆதிக்கம் நிலைபெற்ற சுமார் ஒன்றரை நூற்ருண்டு இந்திய சரித் திர த் தி ல் மிகச் சிறு பாகமேயாகும். அவர்கள் வருவதற்கு மு ன் ஞ ல் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, இந்தியா, அவர்கள் உதவியில்லாமல், மிக உயர்ந்த முறையில் தன்னரசு கொண்டு விளங்கி வந்தது. அவர்கள் இந்தியாவை விட்டுச் சென்ற பின்னும், இந்தியா 75
பக்கம்:ஜெயில்.pdf/80
Appearance