கட்டுரைகள் தனியே, தானே, தன் விஷயங்களைக் கவனித்துக்கொள்ள முடியும் என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்! இதற்கு எதிராக ஏதேனும் காரணங்கள் இருப்பின், அக் காரணங்களுக்குக் காரணம் வேற்ருர் ஆதிக்கமேயாகும். இதிகாச காலம் முதற்கொண்டே இந்தியாவை ஒரே ஐக்கிய ராஜ்யமாக அமைப்பதற்குச் செய்யப்பட்ட முயற்சிகள் புலனுகின்றன. பற்பல ஜாதி சமயத்தின ராகப் பிரிந்திருக்கும் ஹிந்துக்களின் புண்ய rேத்திரங்கள் பதிரியிலிருந்து குமரி வரையிலும், துவாரகையிலிருந்து ஜகந்நாதம் வரையிலும் பரந்து கிடப்பது காட்டாரின் ஐக்கியத்தைக் காட்டுவதாகும். சரித்திர காலத்தில் சந்திர குப்தர், அசோகர், அக்பர் சக்கரவர்த்திகளின் ஆட்சியில் பெரும்பாலான இந்தியா ஒரே ஏகாதிபத்தியமாக விளங்கி யிருந்தது. ஆல்ை, பரிபூர்ணமான ஐக்கியம் அடிமைத் தளையினுல்தான் ஏற்படவேண்டி யிருந்ததுபோலும்! இன்று இந்தியா முழுதும் ஒரு குடைக்கீழ் ஒன்றுபட்டு விளங்குகின்றது. வெளியிலிருந்து புகுத்தப்பட்ட இந்த ஒற்றுமை, அடிமை மணம் கமழும் இந்தக் கூட்டுறவு, என்றும் நிலையாய், இந்த நாட்டின் இயற்கைக்கு ஏற்ப அமைந்து, பரிபூர்ண சுதந்திரத்துடன் கூடிய கூட்டுறவாக இலங்கும் காலம் தொலைவில் இல்லை. இன்று ஆதிக்கம் பெற்றுள்ளவர்களின் நன்மைக்காக ஒன்று சேர்க்கப் பட்ட அங்கங்கள், ஒன்ருேடொன்று இயற்கையாகவே பொருந்தி, ஒரே இரத்தம் ஒடக் கூடிய ஒரு பேருரு வத்தின் உறுப்புக்களாக அமைந்து, 40 கோடி மக்களின் வலிமை பெற்ற விசுவரூபமாக விளங்குவதை நாளைக் காண்போம். அடிமையில் ஒற்றுமைப்பட்டு விளங்கும் 76
பக்கம்:ஜெயில்.pdf/81
Appearance