கட்டுரைகள் ளத்தையும் அனுப்புவது மேல் காட்டார் வழக்கமாக இருந்தது. இக்காரணங்களால் முன்னல் எழுச்சி பெருக வங்காளத்தில் ஒரு புதிய உணர்ச்சி பரவியது. ஆரம்பத்தில் ஆங்கில ஆட்சி இந்தியா முழுவதும் வியாபிக்கவில்லை. வங்காளமும் மதராஸின் ஒரு பாகமுமே அதற்கு உட்பட்டிருந்தன. வங்காளத்தில் அதற்கு எதிராகப் பெரும் கிளர்ச்சிகள் நடைபெருமல் இருந்த போதிலும் சன்னியாசிக் கலகம் போன்ற சிறு கலகங்கள் மட்டும் இடையிடையே நேர்ந்தன. நாட்டில் கொள்ளைகள் முற்றிலும் கின்றுவிடவில்லை. பிரிட்டிஷ் அர சாங்கம் தீர்வைகள் வசூலிப்பதும் கஷ்டமாக இருந்தது. ஜனங்க ளிடம் நேரில் சென்று வசூலித்தவர்கள் அவர்களுடைய அதிருப்தியைப் பெற்றனர். நாடு முழுதும் கிராமங்கள் சிதறிக் கிடந்ததாலும், ஒவ்வொரு கிராமமும் ஒரு குடி யரசாய் விளங்கியதாலும் பழைய கட்டுப்பாடுகளை உடைத்துப் புதிய ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது கடின மாக இருந்தது. காசியைப் பற்றிய ஒரு பழைய சரித்திரம் அங்கு நகர சபைக்கு ஜனங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந் தெடுத்ததாயும், போலீஸ்காரர்கள் கூடத் தேர்ந்தெடுத்தே நியமிக்கப்பட்டதாயும் கூறுகின்றது. ஜனநாயக முறையில் இவ்வளவு முன்னேற்றம் அடைந்தவர்களைத் திடீரென்று அடக்கியாள்வது சுலபமன்று. மேலும், அரசாங்க வரி வசூல் அதிகாரிகள் ஜனங்களிடமிருந்து அளவற்ற திரவியத்தைக் கொள்ளையிடுவதும் இயற்கையா யிருந்தது. இதல்ை சர்க்கார் சில பணக்காரர்களை வரி வசூலிக்க நியமித்தனர். அந்த முறையும் சரியாக நடைபெறவில்லை. பின்னர் சிலர் வரிகளை வசூலித்துக்கொண்டு சர்க்கா 78
பக்கம்:ஜெயில்.pdf/83
Appearance