தேசீய மறுமலர்ச்சி ரோமாபுரி வீழ்ச்சி யுற்றது, புத்தரால் இந்தியா விழ்ச்சி யுற்றது 1 என்று உலகப் பிரசித்தி பெற்ற ஒரு பெரியாரே கூறவேண்டுமாயின், எத்தகைய உணர்ச்சி ஏற்பட்டு வந்தது என்பதை நாம் யூகித்துக் கொள்ளக்கூடும். அந்த உணர்ச்சியுடன், ! உங்கள் தேகத்திலிருந்த நகைகளை யெல்லாம் அங்கியருக்குக் கொடுத்துவிட்டு இரு ம் பு வி லங்கு க ளே அணிந்துகொண்டு இருக்கிறீர்களே, மூடர்களே ! என்று ஜனங்களைத் தட்டி யெழுப்ப ஆங்காங்கே பல தலைவர்கள் தோன்றி யிருந்தார்கள். வெறியூட்டும் எண்ணற்ற தேசீய கீதங்கள் லட்சக் கணக்கான குரல்களில் பாடப் பட்டன. நாடகங்கள் பல எழுதி நடிக்கப்பட்டன. சொற்பொழிவுகள், பத்திரிகைகள், கீதங்கள், நாடகங்கள் முதலிய பல வழிகளிலும், அரேபியா, எகிப்து, பாரசீகம், திபெத், பர்மா - அசப்ய ஜப்பான்கூட - விடுதலை பெற்றிருக் கின்றனவே! இந்தியா, நீ மட்டும் உறங்குகிருயே என்று கோவிக்கப்பட்டு வந்தது. சுரேந்திர நாதர் காலத்தில் ஐ. ஸி. எஸ். பரீசைr. சம்பந்தமாக முதலில் ஆரம்பிக்கப்பட்ட அகில இந்தியக் இளர்ச்சி பின்னல் ஒரு தேசீய இந்தியச் சங்கமாய்ப் பரிணமித்தது. சுரேந்திரரே முதல் ராஜீயக் கைதியாக வாழ்ந்து வழி காட்டவும் ஒரு சமயம் நேர்ந்தது. ஜனங் களும் தங்கள் தாழ்ந்த நிலைமையும் தரித்திரமும் மாற வேண்டும் என்று விரும்ப ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஒர் அளவு தன்னம்பிக்கை ஏற்பட்டது; யார் எதைச் செய்தாலும் பேசாமல் வரவேற்பது கூடாது என்று தெரிந்துகொள்ள ஆரம்பித்தனர். ஜனங்களின் மனநிலையில் 85
பக்கம்:ஜெயில்.pdf/90
Appearance