பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

இந்தப் பாடலை இந்த மாதிரியில் ஒரு முறை கூறி விட்டுப் பின்னர் இறுதி யடியை முதலில் தொடங்கி, 'நீல மயில் முருகா நீ, ஏழைக்கு இரங்கு தெய்வம் என்று உன்பால் வந்து அடைந்தேன், ஏழைக்கு இது தருணம்’ என்று சொல்லிக் காட்டுவார்கள். இந்தப் பாட லில் உள்ள வேண்டுகோள் படி, அடிகளார், நீல மயில் முருகனின் தென் பழநி வெற்பின் அருகே இறுதி எய்தியது குறிப்பிடத்தக்கது. டாக்டர் கூறியதைக் கேட்டுக் கொண்டு அருகில் இருந்த அனைவர் உள்ளங்களும் உருகிக் கண்ணிராய் வெளிவந்தன. ஒட்டன் சத்திரம் வரையும் சிவிகையிலேயே திருமேனி கொண்டு செல்லப்பட்டது. எல்லா ஊர்கட்கும் தந்திகள் பறந்தன. அங்கிருந்து திருமேனி திருச்சிக்கு மோட்டாரில் கொண்டு செல்லப்பட்டது. எந்த மோட்டார் காருக்கும் கிடைக்காத பெருமைப் பேறு இந்த மோட்டார் காருக்கு மட்டும் கிடைத்தது. ஆதிலட்சுமி அம்மையார் முதலியோர் அழுது அரற்றினர். மோட்டார் தொடர்ந்தது. 1-2-1942 - ஞாயிறு இரவு சுமார் 11 மணிக்குத் திருமேனி திருப்பாதிரிப்புலியூர் அருளகத்தை அடைந்தது. அன்றிரவும் மறுநாளும் கேள்வியுற்ற மக்களும் வெளி யூர் அன்பர்களும் கூட்டம் கூட்டமாய்ச் சென்று திரு மேனியை வழிபட்டு வருந்தித் துயர்க் கடலில் ஆழ்ந்தனர். அடிகளாரின் திருமேனி எப்போதும் போல் பட்டொளி வீசிப் பளபளத்துக் கொண்டிருந்தது. 2-2-1942-ஆம் நாள் காலை இயற்கையே துக்கத்தில் ஆழ்ந்திருப்பது போல் சூழ்நிலை. எங்கும் துக்கமே தனி யாட்சி புரிந்துகொண்டிருந்தது. வந்த அன்பர்களை ஏற்றிக் கொண்டு வந்த வண்டிகள் சூழ்நிலையின் துயரத்தைப்