பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பொறுக்க முடியாதவைபோல் அங்கிருந்து நகர்ந்து கொண்டே இருந்தன. * திருமேனிக்குப் பல வகைப் பூசனைகளும் நடத்தப் பெற்றன. அடிகளார்க்குப் பெருந்துணையாய் இருந்து இறந்துபோன தாய் மாமனின் மகனும், திருச்சி தேசீய உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராயிருந்தவரும் ஆகிய கந்தசாமி ஐயரவர்கட்கு ஆறாவது பட்டம் சூட்டப் பெற்றது. அடிகளார் எழுதி வைத்திருந்தபடி, சிவ சண்முக சத்தியஞான சிவாசாரிய சுவாமிகள் என்னும் பட்டப் பெயரும் சூட்டப்பெற்றது. பின்னர்த் திருமேனி, திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் உள்ளதும் புலவர் பாளையம் என்னும் புனைபெயர் பெற்றதும் அப்பரடிகள் கரையேறிய இடமும் ஆகிய வண்டிப்பாளையம் என்னும் ஊரைச் சார்ந்துள்ள அடக்கத் (சமாதித்) தோட்டத்திற்கு அன்பர்களால் ஏந்திச் சிவிகையில் கொண்டு செல்லப் பட்டது. அங்கே குறிப்பிட்ட மணிநேரம் அடக்கக்கோயிலின் வாயிலில் திருமேனி வைக்கப்பட்டது. அன்பர்கள் பலர் இரங்கல் உரை ஆற்றத் தொடங்கினர். அப்போது யான் (சு.ச.) மயிலம் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளனாகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். மயிலத்திற்கும் செய்தி அனுப்பப்பட்டது. கல்லூரிக்கு விடுமுறை விட்டாயிற்று. எனது தலைமையில் மாணவர் குழாம் வண்டிப்பாளையத்திற்குப் புறப்பட்டது. சென்னை செல்லும் புகைவண்டி மயிலம் நிலையத்தில் சிறிது நேரம் நிற்கும். நாங்கள் அனைவரும் நிலையத்திற்கு உரிய நேரத்தில் வரமுடியாமையால், நாங்கள் வருவதற்காக ஐந்து நிமிடமோ-பத்து நிமிடமோ (நினைவில்லை)-புகை வண்டி நிலையத் தலைவர் புகைவண்டியை நிறுத்தி