பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அடிகளாரைவிட இரண்டு மடங்கு பெருமை பெறலாம் என்று கூறினேன். ஆனால், அப்போது மறைந்த ஞாயிறின் பேரொளிக்கு நிகர் ஏது?-எங்கே? இனியாயினும் அந்த ஞான ஞாயிறு மீண்டும் தோன்றுக! 14. பெற்ற பெருமைகள் அடிகளார் பெற்ற பெருமைகள் பலவற்றில் சிலவற்றை இவண் காணலாம். அவருக்குப் பல ஊர்களிலும் பலவகை யோரிடத்திலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. ஏழையர் முதல் மிகப்பெரிய செல்வர்வரை - இளையோர் முதல் முதியோர் வரை - எளியவர் முதல் பெரும் பதவியாளர் வரை அடிகளாரைப் போற்றி வணங்கினர். பழமலை உள்ளுரிலும் சரி - வெளியூர்களிலும் சரி - அடிக ளாரைக் காணவருபவர்கள் பலவகைப் பழங்கள், மாலை கள் முதலியன கொண்டு வந்து அடிகளாரின் திருவடிகளில் வைத்து நெடுஞ்சாண் கிடையாய்க் கீழே விழுந்து வணங்கி எழுவர். பழங்கள் மலை - மலையாய்க் குவிந்துவிடும். எவர்காலிலும் விழுந்தறியாத் திரு.வி.க. அடிகளார் திருவடி களில் மட்டும் விழுந்து வணங்கினார். இன்னின்னார் வீட்டிற்கு இன்னின்ன பழங்கள் இத் தனை இத்தனை கொடுக்க வேண்டும் என ஒரு தாளில் குறிப்பு போட்டு என்னிடமும் மற்ற மாணாக்கரிடமும் அடிகளார் அளிப்பார். நாங்கள் சுமந்து கொண்டு தெருத் தெருவாய்ச் சுற்றிக் கொடுத்து வருவோம். அடிகளார் வெளியூர்களில் இருக்கும் போதும் இவ்வாறு அங்கங்கே பழமலைகள் உருவாகிவிடும். அடிகளார் புகை வண்டி