பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 பில் அமரவைத்து, பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத் திற்கு எழுதித் தக்க ஒப்புதல் பெற்றுச் சேர்த்துக் கொண் டார். சு.சண்முகம் என்பவன் அடியேனே. கல்லூரி மாணவர்கட்கு இலவசமான உண்டியும் உறையுளும் உண்டு. மாணவர்களின் எண்ணிக்கைக்கு எல்லை உண்டு, மேற் கொண்டு எங்கட்கு இடம் இன்மை யால் யாங்கள் நால்வரும் வெளியில் உண்டு உறைந்து வகுப்பிற்குச் சென்று வந்தோம். இந்த நிலையில், இலவச விடுதியில் எங்கட்கு இடம் கிடைக்கச் செய்யுமாறு ஞானி யார் அடிகளார்க்கு நான் எழுதினேன். இலவசச் சோறு தான் - ஆனால் அது அரசுச் செலவு - அதனால் வெட் கப்பட வேண்டியதில்லை. ஒரு நாள் ஞானியார் அடிகளாரிடமிருந்து என் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. பிரித்துப் பார்த்தேன். திரு நீற்றுப் பொட்டலமும் உடன் இருந்தது. திரு நீறு, அணிந்து கொண்டோம் அக்கடிதத்திற்குள் மற்றொரு கடிதம் அடங்கிய உறை ஒன்று இருந்தது. அதன்மேலே திருவாளர் நாடிமுத்துப்பிள்ளை - தஞ்சாவூர் என்று எழுதி ருந்தது. என்னை விளித்து எழுதிய கடிதத்தில், நாடி முத்துப் பிள்ளைக்கு நான் (அடிகளார்) எழுதியுள்ள கடிதத்தை நீங்கள் நால்வரும் எடுத்துச் சென்று தஞ்சை யில் அவரிடம் கூறின் உங்கட்கு இடம் கிடைக்கும் - என்று அடிகளார் எழுதியிருந்தார். அன்றே நாங்கள் நால்வரும் கடிதத்தை எடுத்துக்கொண்டு நாடிமுத்துப் பிள்ளையைக் காணத் தஞ்சை சென்றோம். . நாடிமுத்துப் பிள்ளை மாபெருஞ் செல்வமும் செல்வாக் கும் உடையவர். அப்போது மாவட்ட ஆட்சிக் குழுத்தலை 617 Tü (District Board President) g)(5$45 sjö gå காலத்தில் அது பெரிய பதவி, தஞ்சை மாவட்டம் முழுவு