பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 தற்கும் தலைவர் போன்ற அரசுப்பதவி. திருவையாறு அரசக் கல்லூரியைக் கவனித்துக் கொள்வது அந்த மாவட்டக் குழுவே. அரசர் கல்லூரியில் இடம் கிடைக்கச் செய்யும் பொறுப்பும் அந்தக் குழுவினுடையதே. எனவே, குழுத்தலைவர் நாடிமுத்துப்பிள்ளை விரும்பின் எங்கட்கு இடம் கிடைக்கச் செய்யலாம். எனக்குச் சரியாக நினை வில்லை - உண்மையோ பொய்யோ - பர்மாவிலோ அல்லது இந்தோ சைனாவிலோ, ஒரு தெருவில் உள்ள வீடுகள் அனைத்தும் நாடிமுத்துப் பிள்ளையினுடையது - என்று சொல்லக் கேட்ட நினைவு உள்ளது. மாலை 4 மணிக்குக் கல்லூரி விட்டதும் நாங்கள் நால்வரும் நடந்தே தஞ்சையிலுள்ள மாவட்டக் குழு (District Board) அலுவலகம் அடைந்தோம்.இரவு 8 மணி இருக்கும். நாடிமுத்துப் பிள்ளையைப் பெரிய கும்பல் சூழ்ந்து கொண்டிருந்தது. அந்தக் கும்பலில் நான் புகுந்து அடிகளார் அனுப்பிய மடலைப் பிள்ளையிடம் தந்தேன். அவர் பிரித்துப் பார்த்தார். உள்ளேயிருந்த பொட்டலத் திற்குள் இருந்த திருநீற்றை அன்புடனும் அடக்கத்துடனும் எடுத்து நெற்றி நிறைய அணிந்துகொண்டார். பின்பு கடிதத்தைப் பார்த்தார். பிறகு எங்களை நோக்கி, 'நீங்கள் கல்லூரிக்குப் போகலாம் - உங்கட்கு இடம் கிடைக்கும்’ என்று கூறினார். நாங்கள் மகிழ்ச்சியுடன் திரும்பினோம். அடிகளாரின் கடிதத்தில், "எங்கள் மடாலயத்திலிருந்து மாணாக்கர் நால்வர் திருவையாற்று அரசர் கல்லூரிக்கு வந்துள்ளனர்; அவர்கட்கு விடுதியில் இடம் கிடைக்கச் செய்யவேண்டும் என்று எழுதப்பட்டிருந்ததே தவிர, நால் வரின் பெயர்கள் குறிப்பிடப்பட வில்லை. அதனால், நாடி முத்துப் பிள்ளை, கல்லூரி விடுதிக் காப்பாளருக்கு 'திருப்பாதிரிப் புலியூரிலிருந்து மாணாக்கர் நால்வர்