பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 வந்துள்ளனரே - அவர்களின் பெயர்களை எழுதியனுப்புக' என்று கடிதம் எழுதி அனுப்பினர். காப்பாளர் எங்கள் நால்வர் பெயரையும் கேட்டு எழுதியனுப்பினார். பின்னர், எங்கள் பெயர்களைக் குறிப்பிட்டு முறைப்படி நாடிமுத்துப் பிள்ளை ஆணை அனுப்பினார். நாங்கள் உணவு விடுதியில் சேர்த்துக் கொள்ளப் பெற்றோம். இதைக் கொண்டு: ஞானியார் அடிகளார்க்கு இருந்த சிறப்புப் பெருமைச் செல்வாக்கை அறியலாமன்றோ? சென்னைப் பல்கலை இது போன்றிருந்த மற்றொரு செல்வாக்கையும் இவண் காண்பாம். முத்து. இராசாக் கண்ணனார் என்பவர் கடலூரைச் சேர்ந்த வண்டிப் பாளையத்தினர். புலிசை ஞானியாரிடத்தில் தமிழ் பயின்று வித்துவான் பட்டம் பெற்றவர்; பின்பு, B.O.L. (Hons) பட்டம் பெற்றார். தமிழ் நாட்டில் பல அரசுக் கல்லூரிகளில் தமிழ்த்துறைத் தலைவராயும் முதல்வராயும் பணியாற்றினார். இறுதியில், சென்னையில் குறளகத்தில் உள்ள - தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராயிருந்து ஒய்வு பெற்றார். அவர், ஞானியார் அடிகளாரைப் பாராட்டி எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், அடிகளாரால் தாம் பெற்ற நன்மை யொன்றைக் குறிப்பிட்டு அடிகளாரின் சிறப்புச் செல்வாக் குப் பெருமையைக் குறிப்பிட்டுள்ளார். அந்தப்பகுதி அவர் எழுதியுள்ளபடியே வருமாறு: முற்றுணர்வினர் “... திருவையாற்றுக் கல்லூரியும் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும், வித்துவான் தேர்வில் தேரும் எண்ண முடையாருக்கு நிலைக்களங்களாக விளங்குகின்றன. அடியேன் அடிகளார் திருமுன் இருந்து கற்கத் தொடங்கிய நாள்தொட்டு அவர்கள் முன்னரிருந்து கற்றலைத் தவிரக் கல்லூரியில் சேர்ந்து படித்தலை விரும்பாதவனானேன்.