பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 என்னை மறந்து சில வினாடிகள் நின்றேன். மிக்க ஆவலுடன் தேர்வுக்கென்று படித்துக்கொண்டிருந்த எனக்கு அச்செய்தி பெரியதோர் ஏமாற்றத்தைத் தந்தது. அடக்கமுடியாததோர் பெருஞ் சினம் பல்கலைக் கழகத் தார் மேல் பொங்கி எழுந்தது. எனக்குச் சபிக்கும் ஆற்றல் இருந்தால் ..? - சினம் அடங்கவில்லை. உட்கட்டிலிருக்கும் அடிக ளாரைச் சென்று வணங்குவதையும் மறந்திருந்த நான் சிறிது நல்ல அறிவு வர உள்ளே விரைந்து சென்றேன். தம்மை நோக்கி வந்த என் உள்ளத்தைத் தம் அறிவுக் கண் கொண்டு ஆழ்ந்து நோக்கினர். யான் பேச முடியாத நிலையினனாய் 'ஒ' என்று கதறியழுதுவிட்டேன். என் துன் பத்தைக் கண்ட அடிகள், 'இராஜா! அழாதே. அவர் களுடன் நீயும் தேர்விலிருந்து எழுதலாம்” என்றார். நீரால் அவிந்த நெருப்பென அடியேன் உள்ளக் கொதிப்பு உடனே ஆறியது. ஏன்? அவ்வாண்டிலேயே அடிகள் எவ்வாறேனும் நம்மைத் தேர்விற்குச் செல்லும் வண்ணம் செய்வார்கள் என்றே பிள்ளை மதியால் பேதை யேன் எண்ணினேன். 1936-இல் உயர்திரு கா. நமச்சிவாய முதலியாரவர், களைத் திருமடத்திற்கு அழைத்த அடிகளார், 'இவ் விளைஞ்ன் வித்துவான் தேர்விற்குத் தனித்துச் (Private) செல்ல விழைகின்றான். தங்கள் உதவி மிகவும் வேண்டற் பாலது’ என்றனர். அவ்வளவே - அவர் அடியேனைச் சென்னைக்கு அழைத்து வந்தனர். பலரிடம் சென்று வந்தனர். பின் தேர்விற்கு வெண்பொற் காசுகள் கட்டப்பட்டன். முன் குறித்த மாணவியாரும் அடியேனும் அவ்வியாண்டில் ஐயாற்றுக் கல்லூரிலேயே எழுத நேர்ந்தோம். ஒரே