பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மண்டபத்தில் தேர்வினை எழுதினோம் என்று மட்டும் குறிப்பதற்கில்லை. நூறு அளவில் தேர்விற்கென்று ஆண் கள் இருந்த அம்மண்டபத்தில் அடியேனுக்கு ஆண்கள் இடையில் இருந்தெழுத வாய்ப்பில்லை. தனித்த இடங்க ளாக மூன்று குறிக்கப்பட, அவற்றுள் நடுவில் அடியேன் இருந்தெழுத, அடியேனுக்கு வலப்பக்கத்தே அம்மாணவி யாரும் இருந்து எழுதுமாறு நேர்ந்தது. இந்நிகழ்ச்சியை எண்ணும் போது, அடிகளாரின் முற் றறிவின் பெருமையை எண்ணி வியத்த லல்லது வேறு என்ன செய்யக் கடவேன்!” என்பது இராசாக் கண்ணனாரின் கட்டுரைப் பகுதி. அடிகளாரின் செல்வாக்குப் பெருமை இதனாலும் அறியப் படும். அடிகளார் ஒரு முறை எனக்காகவும் ஒரு பரிந்துரை செய்துள்ளார். யான் திருவையாற்று அரசர் கல்லூரியில் பயின்று வித்துவான் தேர்வில் வெற்றி பெற்ற மறு திங்களே, மயிலம் சிவத்திரு சிவஞான பாலைய சுவாமிகளின் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளர் பணி எனக்குக் கிடைத்தது. பணியில் வந்து சேருமாறு சிவத்திரு சிவஞானபாலைய e9/14-GOTITri GT6ðräG egy 69 GMT (order of appointment) அனுப்பினார். ஆணையைப் பெற்ற நான், ஞானியார் அடிகளாரைக் கண்டு வணங்கி வாழ்த்து பெற்றுச் செல்ல விழைந்தேன். அப்போது அடிகளார் திருவதிகையில் எழுந் தருளியிருந்தார். யான் திருவதிகை சென்று கடிதத்தைக் காண்பித்து வாழ்த்து வேண்டி வணங்கினேன். அடிகளார் வாழ்த்தித் திருநீறு அளித்ததோடு, மயிலம் கல்லூரி முதல் வருக்கு எனக்காக ஒரு பரிந்துரைக் கடிதமும் எழுதியளித் தார்.சண்முகத்தைப் பேணிக்காக்கவும்' என்பது பரிந்துரை யின் சுருக்கக் கருத்து. மயிலத்தில் வேலை கிடைத்தது