பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 புலிசை அடிகளாரின் தொடர்பினாலேயாகும். மற்றும் அடிகளார், என்னுடன் கற்ற க. செந்தில் நாயகம் என்ப வருக்கு, இப்போது வேங்கடேசுவராப் பல்கலைக் கழகம் என்னும் பெயரில் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கும் நிறுவனம் அரும்பாக இருந்த திருப்பதிக் கல்லூரியில் இடம் கிடைக்கச் செய்தார். அடிகளாரின் பெருமையே. பெருமை!. *. - தெய்வ விழாக் கோலம் அடிகளார் சிவிகை இவர்ந்து செல்வது வழக்கம். சுமந்து செல்பவரின் ஒய்வுக்காக வழியில் இடையிடையே சிற்றுார் களில் சிவிகையை நிறுத்தித் தங்குவார். எதிர்பாராத இந்தத் திடீர் வாய்ப்பைப் பெற்ற அண்டை - பக்கத்து ஊரார்கள் ஓடிவந்து அடிகளாரை வழிபட்டுச் சிறப்பு செய்வார்கள். அடிகளார் அவர்கட்குத் திருநீறும் அருளுரை யும் வழங்கி வாழ்த்துவார். பின்னர் அடிகளார் புறப் பட்டதும் அந்த மக்கள் நெடுந்தொலைவு உடன் வந்து வழியனுப்பிவைப்பார்கள். அடிகளார் வருகைக்காகச் சில ஊர்கள் தெய்வவிழாக் கோலம் கொள்ளும். வாழை, கமுகு மரங்கள் கட்டப்படும். மாவிலைத் தோரணங்கள் தொங்கும். நிறைகுடச் (பூரணகும்பம்) சிறப்புடன் இன்னி யங்கள் முழங்க அடிகளாரை மக்கள் வரவேற்பர். ஒவ் வ்ொரு வீட்டு வாயிலிலும் தேங்காய், பழம், வெற்றிலை, கற்பூரம் அடங்கிய தட்டுகளுடன் மக்கள் வந்து, தெய்வத் திருமேனி ஊர்வலம் வரும்போது படையல் செய்வதுபோல் செய்து சிறப்பிப்பார்கள். இக்காட்சி கண் கொள்ளாக் காட்சியாய் இன்புறுத்தும். இத்தகைய ஊர்வலம் எங்கு - என்று - யாருக்கு நடைபெறும் என்பதை அறிய முடியுமா? அறங்காவல் தலைமை திருப்பாதிரிப் புலியூர்ப் பாடலேசுரர் சிவன்கோயில் அறங்காவல் தலைமைப் (தர்ம கர்த்தாப்) பதவி 1936ஆம்