பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 எழுதுகோல் (பவுண்டன் பேனா) ஒன்றை அடிகளார்க்கு அளித்த பெருமை செய்து பெருமை பெற்றனர் சமாசத்தினர். பணி விடைகள் அடிகளார்க்குப் பணி விடைகள் செய்ய அன்பர்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்வர்; அடிகளார் இட்ட வேலையைச் செய்வதைத் தம் பிறவிப் பயனாகக் கருதுவர். அந்தக் காலத்தில் மின் விசிறி அருளகத்தில் போடப்பட வில்லை. அடிகளார் மணிக் கணக்கில் தொடர்ந்து பாடம் நடத்தும் போதும் சொற்பொழி வாற்றும் போதும், யாராவது ஒருவர் மாறி மாறி அடிகளார்க்கு விசிறி விசிறிக் கொண்டிருப்பர். இதைப் பெரியவர்கள் செய்வதன்றி, இளைஞர்களாயிருந்த என் போன்றவரும் செய்வர். யான் எத்தனையோ முறை விசிறியிருக்கிறேன். ஒரு நாள் ஒர் இளைஞன் எங்கேயோ பார்த்துக் கொண்டு அடிகளாரின் உடம்பில் விசிறி உராயச் செய்துவிட்டான். அதிலிருந்து அவனை விசிற விடுவதில்லை, - ஒரு முறை அடிகளார் அஞ்சலகம்(தபால் அலுவலகம்) சென்று அஞ்சல் தலைகள் (ஸ்டாம்ப்) வாங்கி வரும்படி என்னை அனுப்பினார். யான், ஒரு தோள் இருதோள் களாகவும் இருதோள்கள் நான்கு தோள்களாகவும் பூரித்துப் பெருமிதத்துடன் சென்று வாங்கி வந்து கொடுத் தேன். பழகியார் வழியனுப்பியமை அடிகளார் இறுதியில் பழநியைவிட்டுப் புறப்பட்ட போது தைத் திங்கள் - பூச நாள் - இரவு முன்று மணியா கும். தைத் திங்கள் குளிருக்குச் சொல்லவா வேண்டும்? இங்கே, தைஇத்திங்கள் தண்ணிய தரினும் (குறுந்தொகை - 196-4), தைஇத் தண்கயம் (ஐங்குறுநூறு - 84-4), 'தை இத்திங்கள் தண்கயம் (நற்றிணை - 80-7), தைஇத்