பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 கொண்டேன். விழா முடிந்ததும், மறுநாள் காலை, ஞானியாரின் அடக்கத்தைக் காண வேண்டுமென மாணிக்க னார் விரும்பினார். யான் அவரை அழைத்துச் சென்று, திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன் கோயில் - ஞானியார் மடா லயம் - வண்டிப்பாளையத்திலுள்ள அடிகளாரின் அடக்கம் ஆகியவற்றைக் காண்பித்தேன். அவர் உள்ளம் உருகி வழிபட்டார். இராச மாணிக்கனாரும் மாணிக்கனாரும் அப்போது இளம் வயதினர். அந்த இளமையில், புலிசைக்கு நூறுகல் தொலைவிற்குமேல் உள்ள ஊர்களினராகிய இவர்கள் அடி களாரின் அடக்கத்தைக் காண விரும்பினரெனில், அடிகளார் எவ்வளவு பெருமைக்கு உரியவராயிருந்திருக்க வேண்டு மென்பது விளங்கும். மற்றும் அகவை முதிர்ந்த அ. வரத நஞ்சையப் பிள்ளை முதலியோரும் அடிகளாரின் அடக் கத்தைக் கண்டு அஞ்சலி செலுத்தினர். 15. சிவிகையில் செல்லுதல் ஒருமுறை புதுச்சேரிக் கலைமகள் கழக ஆண்டு விழா வில் ஞானியார் அடிகளார் தலைமை ஏற்றிருந்த பொழுது சிறப்புச் சொற்பொழிவாற்றிய திரு.வி. கலியாண சுந்தர னார், அடிகளார் சிவிகையில் மட்டும் செல்லுதல் பற்றித் தமது உரையிடையே பின்வருமாறு அடிகளாரிடம் வேண்டு கோள் விடுத்தார்: 'அடிகளார் மோட்டார் காரையோ - புகைவண்டி யையோ பயன்படுத்தாமல் சிவிகையில் மட்டுமே செல்லு தல் என்ற பழைய மரபைத் தொடர்ந்து கடைப்பிடித்து