பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 இளவரசன் என்னும் நற்பெயருடன் விளங்கி வருகிறோம். தந்தையாரின் ஆயுள் முடிய இன்னும் சில ஆண்டுகளே உள்ளன. எனவே அது வரையும் நல்ல பெயரோடு பொறுத்திருப்போம் எனத் தன் கொலை எண்ணத்தையும் திருத்தி மாற்றிக் கொண்டான். இளவரசனைப் போலவே, நிலைமையைக் கவனித்துக் கொண்டிருந்த துறவியார், நாம் இவ்வளவு காலம் உண் மையான நல்லொழுக்கத்தோடு தூய்மையான துறவியாக இருந்து வந்தோம். நாம் உயிருடன் இருக்கப் போவது இன்னும் சிறிதளவு காலமேயாகும். இப்போது போய்த் தீயொழுக்கம் புரிவோமாயின், இவ்வளவு காலமாக நமக்கு இருந்தநற்பெயர் அடியோடுகெட்டுவிடும். அதனால் பொதுமகளை மறந்து விடுவோம் என எண்ணத்தை மாற்றிக் கொண்டார். - இதுபோலவே, நான் இத்தனையாண்டு காலம் மேனா’ என வழங்கப்பெறும் சிவிகையிலேயே சென்று வந்தேன். இது எங்கள் ஆதீனத்தின் மரபு. யான் வாழப் போவதோ இன்னும் சில்லாண்டு காலமாகத்தான் இருக் கக்கூடும். இப்போது போய் மோட்டார் வண்டியைப் பயன்படுத்தினால் இவ்வளவு நாளாய்க் காத்து வந்த மரபுப் பெருமை கெட்டுவிடும். எனவே, எனக்கு உள்ள இன்னும் சிறிது காலத்தை யான் மேனாவில் சென்றே கழித்து விடுவேன். மற்றும், யான் சிவிகையில் செல்வதால் வழியில் உள்ள சிற்றுார்களை யெல்லாம் பார்க்கவும் அங்கே தங்கிச் சொற்பொழிவு செய்யவும் அவ்வூர் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவும் முடிகிற தன்றோ - என்று கூறி அடிகளார் திரு.வி.க. வின் வேண்டுகோளை நாகரிக மாக மறுத்தார்.