பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ஆயத்தமாகிவிடுவார். நாளேட்டினையும் படித்து முடிப் பார். மாணாக்கர்கள் முறையாக ஏழு மணிக்கெல்லாம் வந்து விடுவர்.பாடம் முற்பகல் 11 மணி வரை தொடரும். பின்னர் மதிய உணவு கொண்டு சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொள்வார். மீண்டும் பிற்பகல் 2 மணிக் கெல்லாம் பாடம் நடைபெறும். மாலையில் வருபவர் - போபவருடன் உரையாடல் நிகழும். உரையாடலும் ஒரு பாடம்போல் - ஒரு சொற்பொழிவு போல் இருக்கும். மாலையில் சொற்பொழிவு தொடங்கப் பெற்று இரவு 9 மணிவரை நடைபெறும், சொற்பொழிவு இல்லாத நாட்களில் பாடம் இரவு 9மணிவரை நடைபெறும். காண வருபவர்களும் பாடத்தில் கலந்துகொள்வர். விருந்து வெளியூர்களிலிருந்து வரும் அன்பர்களுக்கு மதியமும் இரவும் அடிகளார் தாமே உடனிருந்து விருந்தளிப்பார். சிறப்பு நாட்களில் பாயாசம் இடும் பணியை அடிகளாரே மேற்கொண்டதாக எனக்கு நினைவு இருக்கிறது. வருபவர்களை அடிகளார் அன்புடன் வரவேற்பதையும் விருந்தளிப்பதையும் பற்றிக் கோவை கிழார் தமது கட்டுரையில் எழுதியிருக்கும் செய்தி அப்படியே வருமாறு: அன்பும் உபசரணையும் 'மக்கள் யார் வந்தாலும் அன்பு காட்டி இன்சொல் கூறி உபசரணையும் செய்வார்கள். செல்வர், பாமரர், முதியவர், இளைஞர், பெண்பாலர், ஆண்பாலர் - யார் வரினும் நெஞ்சம் ஆர்ந்த இன்சொல்லால் வரவேற் பார்கள். ஆகவே, ஒரு முறை கண்டோர்கள் மறுமுறையும் கண்டு அடிகளின் ஆசி பெறவேண்டு மென்றே எண்ணு வார்கள், வந்தவர்களை வெறும் வாய்ப் பேச்சால் உபசரிப்பதே அன்றி அன்னமும் இட்டு மகிழ்விப்பார்கள்.