பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 விசயநகரம் ஆகிய இடங்களிலும் அருளகங்கள் (மடால யங்கள்) உண்டு. அடிகளார் தமது சுற்றுப் பயணத்தின்போது, இந்த இந்த ஊர் அருளகங்களில் தங்கிப் பாடம் நடத்துவது, சொற் பொழிவு ஆற்றுதல் செய்வதோடு, அருளகக் கட்டடங் களைப் பழுது பார்த்துச் சீர்திருத்தும் திருப்பணியையும் மேற்கொள்வார். சிதைந்ததைப் பழுது பார்த்துத் திருத்து தல், சில பகுதிகளைப் பிரித்துப் புதிதாய் அமைத்தல், மதில் சுவர் எழுப்புதல், புதிய பகுதிகள் கட்டுதல் முதலி யன நடைபெறும். ஆதீனத்திற்குக் கடலூர் மஞ்சக்குப்பத்தில் ஒரு கட்டடம் இருந்தது. அடிகளார் அங்கே சென்று தங்கி அதைக் சீர்செய்தார். பாடங்களும் சொற்பொழிவுகளும் உடன் நடைபெற்றன. அந்தக் காலம் கோடைக் காலம்.எனக்குக் கல்லூரியில் தொடர்ந்து மூன்று திங்கள் கோடைவிடுமுறை உண்டு. அப்போது அடிகளார் பிரபுலிங்க லீலை நடத்திக் கொண்டிருந்தார். நான் நாடோறும் தொடர்ந்து சென்று பிரபுலிங்கலீலை பாடம் கேட்டேன். இத்தகைய வாய்ப்பு பலர்க்கும் கிடைப்பதுண்டு. விடுமுறை நாட்கள் அடிகளார் தம் அருளகத்தில் நடத்தி வந்த பள்ளியில் சனி - ஞாயிறு விடுமுறை கிடையாது. திங்கள் தோறும் அமாவாசை நாளிலும் மறுநாள் பாட்டிமையிலும், மற்றும் முழுநிலாப் பருவத்திலும், மறுநாள் பாட்டிமையிலும் விடுமுறை விடப்பட்டது. இது பழைய காலப் பழக்கமாகும். வெள்ளையர் வந்த பின்ன்ரே சனி - ஞாயிறு விடுமுறை விடப்பட்டது.