பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கொண்டிருந்தார். இப்போது சத்துணவுத் திட்டம்' என் கிறார்களே - அப்போதே, தரும பாடசாலையில் பயின்ற ஏழை மாணாக்கர் சிலர்க்கு உணவு அளித்து வந்தார்; செல்வர்களைக் கொண்டு, உடை, புத்தகம் முதலிய வழங்கச் செய்தார். இவ்வாறு இன்னும் பல வகைகளில் ஏழையரின் இன்னல் தீரப் பாடுபட்டார். அடிகளாரின் வாழ்க்கை நடைமுறைகள் பலராலும் போற்றப்பட்டு வந்தன. 17. சாதி-மதக் காழ்ப்பு இன்மை வீர சைவத் துறவியாகிய ஞானியார் அடிகளார்க்குச் சாதி - மதக் காழ்ப்பு கிடையாது. வைணவர், சமணர் கிறித்தவர், இசுலாமியர் முதலிய அனைத்து மதத்தினர் பாலும் கசப்போ - வெறுப்போ இன்றி அனைவர்பாலும் அன்பு செலுத்தினார். எந்தச் சாதி மதத்து மாணவர்க்கும் அவரவர் விரும் பும் நூலை அடிகளார் நடத்தினார். கிறித்தவக் கன்னி மார்களும், வைணவம் - கிறித்தவம் - சமணம் - இசுலா மியர் ஆகிய மதங்களைச் சேர்ந்த மாணவர்களும் அடிக ளாரிடம் கல்வி பயின்றுள்ளனர். திருவந்திரபுரம் . அடிகளார், வைணவர்களின் வேண்டுகோட்கு இணங்கி, திருப்பாதிரிப்புலியூருக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள திருவயிந்திரபுரம் என்னும் வைணவத் திருப்பதிக்குப் போந்து, மார்கழித் திங்கள்’ என்னும் ஆண்டாளின் திருப்பாவைப்பாடலுக்கு வைணவ மரபு வழுவாமல் விளக்கம் கூறி அரியதொரு சொற்பெருக்கு