பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சாக்கிய நாயனார் என்பவர் அறுபத்து மூன்று சைவ நாயன்மார்களுள் ஒருவர். இவர் சமணர்க்கு இடையே வாழ்ந்து வந்தார்; ஆனால் சைவ மதப் பற்றுடையவர். இவர் சைவம் சார்வதை விரும்பாத சமணர்கள் இவரைக் கண்டித்தனர். எனவே, இவர், சமணர் மனம் மகிழும்படி, சிவன் திருமேனியைக் கல்லால் அடித்துக்கொண்டிருந்தார். அதாவது, ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு மலராக உள்ளத்தில் கற்பனை செய்துகொண்டு சிவனுக்கு மலர் வழிபாடு (அர்ச்சனை) செய்வதாக எண்ணிக் கொண்டு அவ்வாறு செய்தார். இவர் வெளிக்குச் சமணராய்த் தெரிந் தாலும் உள்ளத்தால் சைவராய் விளங்கினார். இதனைச் சேக்கிழாரின் பெரிய புராண நூலில் உள்ள 'எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருள் என்றே துன்னிய வேடந்தன்னைத் துறவாதே தூய சிவம் தன்னைமிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார்’ என்னும் (3646) பாடலால் அறியலாம். ஞானியார் அடிக ளார், இந்த வரலாற்றைக் குறிப்பிட்டு, நாம் எந்த மனத் தினருடன் பழகினும் சைவப் பற்றுடையவராய் இருத்தல் போதுமானது என்று கூறினார். அன்பர்கள் கேட்டு ஆறு தல் உற்றனர். பின்னர்ப் பூவை.கலியாணசுந்தர முதலி யார், அதன் பிறகு வேலூரில் நடைபெற்ற சமாச மாநாட்டிற்கு வராதொழிந்தார்; சமாசத் தலைமைப் பதவியையும் துறந்தார்; என்னே இவரது மதக் காழ்ப்பு ! காவுக்கரசர் அடிகளார், ஒரு சமயம் தஞ்சை மாவட்டம் ஆடு துறைக்கு அடுத்த வடமட்டம் என்னும் பெயரும் உடைய வேதமடம் என்னும் இடம் சென்றார். வடமட்டம் சமீன்