பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123, தார் திருவேங்கடம் பிள்ளை அன்புடன் வரவேற்றார். வேதமடம் வாகீச பக்த பத சேகர சபை' என்னும் சபை யின் முதல் ஆண்டு விழா 3-1-1919 முதல் மூன்றுநாள் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. அவ்விழாவின் ஒரு கூறாக, சச்சிதானந்தம் பிள்ளை 'மாற்று மதம் புகுந்தவர் விரும்பினால் அவரை மீண்டும் சைவத்தில் சேர்த்துக் கொள்ளலாம் - என்னும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அது காலை, கும்பகோணம் புலவர் வேங்கட ராம ஐயர், அவர் மீண்டும் மாற்று மதம் புகக் கூடும் - அதனால் அவரைச் சேர்த்துக் கொள்ள லாகாது எனக் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தார். இதைப் பலரும் ஆதரித்துப் பேசினர். பின்னர், திரு.வி. கலியாண சுந்தரனார், மாற்று மதம் புக்கவர் வரின் சைவத்தில் சேர்த்துக் கொள்ளலாம்; மீண்டும் ஒரு முறை அவர் மாற்று மதம் புக்குத் திரும்பிச் சைவத்திற்கு வரின் சேர்த்துக் கொள்ள வேண்டா - என ஒரு திருத்தத் தீர் மானம் கொண்டு வந்தார். இது ஏற்றுக் கொள்ளப் பட்டது. . - இந்தக் குழப்ப உரைகள் முடிந்தபின், அடிகளார் முடிவுரை கூறலானார்கள்: பெண்மணியாகிய திலகவதி யம்மையார், மாற்று மதமாகிய சமணம் புக்கிருந்த தம் தம்பி நாவுக்கரசரை மீண்டும் சைவத்திற்குவரச் செய்தார்; சைவ உலகம் அதை ஏற்றுக்கொண்டு நாவுக்கரசரைப் போற்றுகிறது. ஆடவர்களாகிய நாமோ, மாற்று மதம் புக்கவரை மீண்டும் ஏற்றுக் கொள்வதா-இல்லையா - என ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளோம் - துணிந்து ஏற்றுக் கொள்ளும் உள்ள வலிமை நமக்கு இல்லை' - என்று அடிகளார் கூறியபோது, அனைவர் கண்களும் மகிழ்ச்சித் துளியைச் சிந்தின. அடிகளார் மதக் காழ்ப்பு அற்றவர் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று அல்லவா?