பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 சென்னையை யடுத்த கோவூர் சிவாலயத்தில் நடை பெற்ற திருவிழாவை முன்னிட்டுச் சென்ற திங்கள் இறுதி யில் அவண் போந்து, பத்து நாட்கள் கேட்பவர் செவியும் உள்ளமும் மகிழச் சொற்பொழிவாற்றினார். பல அன்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் இப்போது மயிலாப்பூரில் வந்திருப்பதாக அறிகிறோம். பல ஆண்டுகளாகப் போதிய உணவும் உரமும் இல்லாமையால், சென்னைத் தமிழர்கள் உள்ளத்தில் வாடிக்கிடந்த தமிழ்ப்பயிர் ஞானியார் அவர்களின் சொன் மாரியினால் மீண்டும் தழைத்தோங்கும் என்று நம்பு கிறோம். ஆம்; 'சைவப்பயிர்' என்னாது வேண்டுமென்றே தான் தமிழ்ப்பயிர் என்று சொன்னோம். ஞானியார் ஒரு சைவ மடத் தலைவராயிருந்த போதிலும், அவரு டைய சொற்பொழிவுகளில் சமயப் பகைமை காண்பது அரிது. அவருடைய பேருரைகள் எல்லாச் சமயிகளும் உவந்து கேட்கக் கூடியதாயிருக்கும். சுருங்கச் சொன்னால், அவைகளில் தமிழ் மணமே மிகுந்து கமழும். ஞானியார் காலத்திலேயே உயிர் வாழ்ந்திருக்கும் பேறு பெற்ற நாம், அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்காமல் அசட்டையாயிருந்தால், அது நம் வாழ்க்கை யில் பயன்படுத்திக் கொள்ளாமல் இழந்துவிட்ட சிறந்த தருணங்களில் ஒன்றாகும். பின்னால் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டி வரும். ஞானியார் சுவாமிகள் தமிழ் நாட்டிற்குக் கிடைத்தற் கரிய ஒரு பொக்கிஷமாகும். அதைப் போற்றி வளர்த்துப் பயன்படுத்திக் கொள்வது தமிழர் கடமை. 'என்னால் அழியாப் பதம் தந்தாய், யான் அது அறியாது கெட்டேன்” என்று பிறகு வருத்தப்படுவதில் பயன் இல்லை”.