பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 என்பது திரு விளக்கு' இதழில் வந்த உண்மையான பாராட்டுரையாகும். சைவச் சொற்பொழிவு செய்யினும், வேறு சமயப் பகைமை கலவாததால், அதைச் சைவச் சொற்பொழிவு என்று சொல்வதனினும், தமிழ் மணம் கமழும் சொற் பொழிவு என்று கூறுதலே பொருந்தும் என்பது திருவிளக்கு இதழ் ஆசிரியரின் கருத்து. கிறித்தவத் துறவியர் கிறித்தவத் துறவியாகிய (Rev. Father) ஏசுதாஸ் என் பவரும், மரியதாஸ் என்னும் கிறித்தவரும் அடிகளாரிடம் 'சிவஞான போதம் என்னும் நூல் பாடம் கேட்டனர். அடிகளார். இவர்களைப் பற்றிப் பிறரிடம் குறிப்பிடும் போது, 'அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கு அடியேன்” என்ற சுந்தரரின் திருத்தொண்டத் தொகை அடியை நினைவுபடுத்துவாராம். - சகசானந்தா சுவாமி சகசானந்தா என்பவர் 'அரிசன இனத்தைச் சேர்ந்த துறவி. சிதம்பரத்துக் கோயிலில் அரிசனர் செல்ல முடியாதிருந்த காலத்தில் நகருக்கு மேற்கே ஒரு நடராசர் கோயில் கட்டி அரிசன மக்களை வழிபடச் செய்தவர். சிறந்த கல்வியும் ஒழுக்கமும் பொதுப்பணி ஈடுபாடும் உடையவர். அரிசனராகிய இவரைச் சாதி வேற்றுமை பாராட்டாது, ஞானியார் அடிகளார் தம் அருளகத்திற்கு அழைத்து அவரது பணியைப் பாராட்டிச் சிறப்பு செய் தார். இது காறும் கூறியன கொண்டு, அடிகளாரின் சாதி மதக் காழ்ப்பு அற்ற பெருந்தகைமை உள்ளங்கை நெல்லிக் கனியாய்ப் புலப்படும்.