பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. இன்னாசெய்தாரை ஒறுத்தல்...? காரைக்குடியில் காழ்ப்பு அடிகளார் 1919- கார்த்திகை பத்தாம் நாள் காரைக் குடி அடைந்தார். ஆங்கு நாட்டுக் கோட்டை நகரத்துச் செட்டியார்கள் அடிகளாரைச் சிறந்த முறையில் வர வேற்றுப் பெருமைப் படுத்தினர், அளவு கடந்த பணிவிடை களும் போற்றுதலும் செய்தனர். காரைக் குடியில் அடிகளார் 'மணிவாசகர்' என்னும் தலைப்பில் மூன்று நாட்கள் சொற்பொழிவு முழக்கம் செய்து அனைவரையும் கவர்ந்தார். அன்பர்களின் போற்று தலுக்கு அளவே இல்லை. இஃது இருக்க, காரைக்குடியில் பராசக்தி - அம்பல வாண நாவலர் என்னும் பெரியார் ஒருவர் இருந்தார். அவர் செட்டிமார்க ளால் சிறப்பிக்கப் பெற்றவரே. அப்போது ஞானியார் அடி களார்க்கு நடந்த பெருஞ் சிறப்புகளைக் கண்டு உள்ளத் தில் காழ்ப்புக் கொண்டார். தம் மாணவர்களைக் கொண்டு அடிகளாரைத் துாற்றித் துண்டறிக்கை வெளியிட்டார். அடிகளார் கூறும் கருத்துகள் பொருந்தா - அவர்உரையை யாரும் கேட்கலாகாது - என்றெல்லாம் எழுதப்பட்டுக் கையெழுத்து இல்லாத மொட்டைத் துண்டு அறிக்கை வெளிவந்தது. ஞானியார் அடிகளாரிடத்தில் ஆழ்ந்த அன்பு கொண்ட ஆற்றுார். சுப்புராய ஐயர் என்பவர், அந்த மொட்டை அறிக்கையைப் பொறாதவராய்ப் பதில்துண்டு அறிக்கை வெளியிட்டார். அதில், மொட்டைத் துண்டு அறிக்கையில் உள்ள செய்திகள் உண்மையல்ல. உண்மையாயின் கீழே கையெழுத்து இட்டிருப்பார்களே. யாம் கூறுவதில் ஏதே