பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 னும் ஐயப்பாடு இருப்பின், நேரில் வந்து வினவின் விளக்கு மாற்றால்விளக்குதும் என்று எழுதிக் கையெழுத்துப்போட்டு வெளியிட்டார். விளக்குமாற்றால் விளக்குதும் என்பதற்கு விளக்க வேண்டிய முறையில் விளக்குவோம் என்பது z - பொருள். ஆனால், அதில், விளக்குமாற்றுக் கட்டையால் - அதாவது - துடைப்பக் கட்டையால் அடிப்போம் என்னும் குறிப்புப் பொருளும் மறிைந்து கிடக்கிறது. இந்த அறிக் கையும் கூட்டத்தில் வழங்கப்பட்டது. இதையறிந்த ஞானியார் அடிகளார் பெரிதும் மனம் கலங்கி வருந்தினார். சுப்புராம ஐயரை நோக்கி இவ்வாறு மறு அறிக்கை வெளியிடலாமா - அறிக்கை வெளியிடுவது நமக்கு அழகன்று. - "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” (314) என்னும் திருக்குறளை யறிந்த தாங்கள் இவ்வாறு செய்ய லாமா? இந்தப் பழி என்னையே சாருமன்றோ எனக்கூறி வருத்தம் தெரிவித்தார். அடிகளாரின் பெருந் தன்மையான இந்த வருத்த உரை, எரிகிற நெருப்பில் நெய் வார்த்தாற்போல் அன்பர் களின் உள்ளங்களில் மேலும் அன்பைப் பெருக்கிற்று. பலாப் பழப் பண்ணி - ஒருமுறை ரெட்டியார் ஒருவர் தமது பலாமரத்து வேர்ப் பலாப் பழம் ஒன்றை ஓர் ஆள் மூலம் அடிகளார்க்கு அனுப்பினார். அதை முருகனுக்குப் படைக்க வேண்டுமாம். அந்தப் பெரிய பலாப்பழத்தைத் தூக்கிக் கொண்டு வந்த கல்லாத ஆள், அடிகளாரை நோக்கி, இந்த பெரிய பண்ணியை என்னால் தூக்கிக் கொண்டு வரமுடியவில்லை’ என்றானாம். பலாப் பழத்தைப் பண்ணி (பன்றி) என்று குறிப்பிட்டான்.