பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 திருப்பின் நாட்டில் இவ்வளவு அறிஞர்கள் தோன்றி யிருக்க முடியுமா? இவ்வளவு உரையமிழ்தம் மக்கட்குக் கிடைத்திருக்குமா? பன்னூறாயிரவர் அறநெறியைப் பின் பற்றி ஒழுக வாய்ப்பு ஏற்பட்டிருக்குமா? ஞானியார் அடிகளார் தம்மை எதிர்த்து வழக்கில் தோல்வியுற்றவரையும் அருளகத்திற்கு அழைத்து நன் முறையில் வரவேற்றுச் சிறப்பு செய்துவந்தார்கள். இதுகாறும் கூறியவற்றால், அடிகளார், எவரிடமும் காழ்ப்பு கொள்வதோ - உயர்வு தாழ்வு கருதுவதோ இல்லை என்பதும், இன்னா செய்தாரை அடிகளார் ஒறுத்தல் என்பது அவர்க்கு இனிமையே செய்தலாகும் என்பதும் நன்கு விளங்கும். 19. அடிகளாரின் சிறப்புப் பண்புகள் இந்நூல் முழுவதும் அங்கும் இங்குமாக-பரவலாகஅடிகளாரின் சிறப்புப் பண்புகள் விரிவாக விளக்கப்பட் டுள்ளன. மலர்களினின்றும் தேனி தேன் உறிஞ்சித்தேன் கூடுகட்டல் போன்று, மற்ற தலைப்புகளிலிருந்து அடிக ளாரின் சிறப்புப் பண்புகளைத் தேர்ந்தெடுத்துத்தொகுத்து இவண் கருத்துக் கூடு கட்டலாம். ஞானியார் அடிகளார் இனிய முகத்துடன் காட்சி யளிப்பார். குளிர்ச்சியாகப் பேசுவார். யாரும்-எப்போதும் சென்று காணலாம். 'காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்’ (386)