பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பிறர்க்கு உணவு அளிப்பதன்றி, ஏழை எளியவர் கட்குப் பணமும் நூல்களும் தந்து உதவுவதும் அடிகளா ரின் தனிப் பண்பாகும். - அடிகளாரின் இமாலயச் சிறப்புப் பண்பு ஒன்றைக் குறிப்பிடின், மிகவும் வியப்பு அளிக்கும். அவர் சொற் பொழிவுகளின் இடையே, தம்மைக் குறிப்பிட ‘அடியேன்” என்றே கூறிக் கொள்வார். இவண், யாவர்க்கும் அடியேன்” என்று பாடிய சுந்தரரின் நினைவு வருகிறது. அடிகளார் நன்றி பாராட்டுவதில் சிறந்த பண்பாளர். தம் தமிழாசிரியர் சாமிநாத ஐயரின் பெயரைத் தமது அருளகத்து நூல் நிலையத்திற்கு இட்டு, சாமிநாத நூல் நிலையம் என வழங்கச் செய்தார். அந்த ஆசிரியரின் மகனாகிய முத்துக் கிருஷ்ண ஐயரைத் தம் சொந்தச்` செலவில் பி.ஏ. (B.A.) வரையும் படிக்க வைத்தார். அடிக ளாரின் சிறப்புப் பண்புகள் இன்ன பிற-இன்ன பிறவாம். 20. இரங்கல் உரைக்கட்டுரைகள் தவத்திரு ஞானியார் அடிகளார் மறைந்தபின், கட்டு ரைகள் வாயிலாகவும் சிற்றுரைகள் வாயிலாகவும் அன்பர் பலர் - அறிஞர் பலர் விடுத்துள்ள இரங்கல் செய்திகளுள், முதலில் கட்டுரை வாயிலாக உள்ள ஐந்தின் சுருக்கத்தை மட்டும் காண்போம். இவற்றைக் காணின், யான் (சு.ச.) சொல்லாத செய்திகள் எல்லாம் இவற்றின் வாயிலாக அறியப்படும். யான் ஈண்டு எழுதுவதற்குப் பதிலாக, அறிஞர்களின் உரைகளை இங்கே தருவேனாயின், யான் அடிகளாரைப் பற்றி இப்போது வெளியுலகிற்குத் தெரி விப்பதாகவே பொருள்படுமன்றோ? அல்லது, பலருடைய