பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 உரைகளைத் தருவதன் மூலம், யானும் அறிஞர் பலரும் சேர்ந்தும் இந்நூலை எழுதியதாகக் கொள்ளினும் கொள்ள லாம், இனிச்சில கட்டுரைகள் வருமாறு: ஞானியார் (திரு.வி.க.) £ 6 ... . தமிழ்நாட்டில் எத்துணையோ மடங்கள் உள் ளன. அவை என்னை ஈர்த்தனவோ? இல்லை. அம்மடங் களுள் ஒன்றாகிய ஞானியார் மடம் மட்டும் என்னை ஈர்க்குமோ? பின்னை என்னை ஈர்த்தது எது? சுவாமிகளின் பரந்த கலையொளி. . ஞானியார் சுவாமிகள் தென்மொழியில் பெரும் புலமை வாய்ந்தவர்; வடமொழியில் புலமையுடையவர். சுவாமிகட்கு ஆங்கிலமும் தெரியும். இவை எல்லாவற்றிற் கும் மேலாகச் சுவாமிகளிடத்தில் இயற்கைப் புலமை அமைந்திருந்தது. - சுவாமிகளை யான் முதல் முதல் 1913-ஆம் ஆண்டிலே வேலூரிலே சைவ சித்தாந்த மகா சமாச ஆண்டு விழா மேடையில் கண்டேன். அந்நாள் நன்னாள். ஆறுமுக நாவலரை யான் கண்டதில்லை. அவரது நாவன்மையைப் பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இள மையில் யான் கண்ட நாவலர் கதிரைவேற் பிள்ளையே. ஞானியார் சுவாமிகள் பேச்சைக் கேட்ட பின்னை, தமிழ் நாட்டில் மற்றுமொரு நாவலர் இருத்தலைக் கண்டேன். தமிழ் நாட்டிலும் கிளாட்சன்கள், சுரேந்திரர்கள் இருக் கிறார்கள் என்று என் நெஞ்சம் எண்ணியது. ஞானியார் சுவாமிகள் அறப்பள்ளித் தலைமை ஏற்று அரை நூற்றாண்டு ஆயபோது, அப்பள்ளிச் சார்பில் பொன் விழா(1939) கொண்டாடப்பட்டது. அவ்விழா மலரில் என்