பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}38 முதல் நாள் சுவாமிகளின் படத்திறப்பு என்னால் நிகழ்த் தப்பட்டது. இரண்டாம் நாளும் யான் பேசுதல் தேர்ந்தது. அப்பொழுது ஒரிடத்தில், யான் ஒருவரை வணங்கி வந்தேன். அவரும் மறைந்தார்.......' என்று குறிப்பிட்டேன். ஞானியாரின் மடத்துத் தலைமையும் சிவிகையூர்தலும் இனை பிறவும் சுவாமிகளை வெளியூர் செல்லாதவாறு தகைந்துவந்தன. அவைகள் சுவாமிகளைச் சிறைப் படுத்தின என்றே சொல்வேன். இலங்கை, மலேயா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகள் சுவாமிகளின் தமிழைப் பருக எவ்வளவோ விழைந்தன என்பதை யான் அறிவேன். 1041-ஆம் ஆண்டு அன்பர் இராமசாமி நாயுடு என் பவர் தென்னாப்பிரிக்காவினின்றும் சென்னை போந்தனர். அவர் சுவாமிகளையும் என்னையும் தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்ல விரும்பினர். சுவாமிகளைக் காண நாயுடுவும் யானும் காஞ்சி சென்றோம்; சுவாமிகளைக் கண்டோம். நாயுடு சுவாமிகளிடம் தமது கருத்தைத் தெரி வித்தனர். 'எனக்குள்ள தடைகளை முதலியார் சொல்வர்' என்ற பதில் சுவாமிகளிடத்திலிருந்து நகைப்புடன் பிறந் தது. காஞ்சியில் கண்ட அந்நகை முகக் காட்சியே இறுதியா யிற்று. இது, 'திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்' என்னும் நூலிலுள்ள திரு.வி.க.வின் உரை, அடுத்து, மகா மகோ பாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியாரவர் களின் கட்டுரைச் சுருக்கம் காண்போம். ஞானியார் அடிகளின் பிரிவு (பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்) உயர்திரு ஞானியார் அடிகளை யான் பல ஆண்டு களாக அறிவேன். அவர்களுடைய தமிழ் மொழிப் பயிற்சி