பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 திரு ஞானியாரடிகளைப் போன்ற பெரியோர்களுக்கு வினையளவு நின்று அதன் ஒழிவில் அழியும், நிலையற்ற உடலாக இல்லாமல் என்றும் நின்று நிலவும் ஒரு நல்லுடலாக வாய்ப்பதற்குத் திருவருள் எப்பொழுது துணை செய்யுமோ? இவ்வேண்டுகோள் அவர்கள் வீட்டு நிலைக்குத் தடையாவதொன்றெனினும், தமிழ் மக்கள் பல்லாயிரவர்க்கு விளையும் நலத்தை நினையுங்கால், இது நம்மனோரால் மேற்கொள்ளத் தக்க தென்றே எண்ணு கின்றேன். இவர்கள் நினைவுக் குறியாக ஒரு தமிழ்க் கலை மாடம் சென்னையம்பதியில் நிறுவப்படுமாயின், தமிழர் நன்றியறிவு சிறந்த தொன்றாகத் திகழ்வதாகும்”. இது பண்டிதமணியின் உரை. அடிகளார் வீடுபேறு (மோட்சம்) அடையக்கூட வேண்டியதில்லை. எப்போதும் உலகில் இருந்துகொண்டு மக்களுக்குப் பயன்விளக்க வேண்டும் என்னும் புரட்சிகரமான கருத்தைப் பண்டித மணி கூறியுள்ளது மிகவும் சிறப்பாயுள்ளது. அடுத்து புலவர் மு. இரத்தின தேசிகரின் கட்டுரைச் சுருக்கம் காண்பாம்: தோற்றம் உண்டேல் மரணம் உண்டு (வித்துவான் மு. இரத்தின தேசிகர், தமிழாசிரியர், போர்டு உயர்தரப் பள்ளி, குடவாயில்) ஞானம் - மெய்ஞ்ஞானம் - மறைந்தது-இல்லை. துவ ராடை தாங்கிய மேனி-அங்க இலிங்கம்-தாழ்வடங்களின் தனியிடம்-திரு நீற்றின் பொலிவு-தமிழ் மணம் கமழும் புன்முறுவல்-இதோ தோற்றுகின்றது. இல்லை உருவெளித் தோற்றம். இனி எங்குக் காண்பது? கையற வெய்தும் கழிமட நெஞ்சே! ஒளி ஒளியுடன் கலந்தது. அவலம் ஒழிதி. | சுவாமிகள் மறைவு தமிழன்னைக்கு நீங்கா இடுக்கண் தந்துவிட்டது. சுவாமிகள் ஒரு தமிழ்க் கடல். அவர்களின்