பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 வர்கள். எல்லாருக்கும் புன்சிரிப்பு; சில நல்ல வார்த்தை. மடாதிபதி என்ற நினைப்பு அவர்கள் வார்த்தைகளையோ செய்கைகளையோ கட்டவில்லை. விருந்தினரை நின்று விசாரிப்பார்கள். உளறுபவர்க்கும் கோபம் இன்றி அறிவு புகட்டுவர். எல்லாரும் அவர்களைப் பார்க்க முடியும்எப்பொழுதும் பார்க்கலாம். அவர்கள் செய்த தொண்டுகள் பல. தங்கள் மடத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தார்கள். பலர்க்குத் தமிழ் அறிவு புகட்டினர். கிறிஸ்தவர்களும் அவரிடம் படித் திருக்கிறார்கள். பலருக்குச் சமய அறிவு புகட்டினர். அநேகர் மனத்தில் அன்பு என்னும் விதையை நட்டார்கள். பற்பலர் வாழ்க்கையைத் திருத்தியமைத்தனர். அவரிடம் உபதேசம் பெற்றோர் கணக்கற்றவர். அவர்களின் சொற் பொழிவு கேட்டவர் பல்லாயிரவர். ஊர்தோறும் சென்று சமய உண்மைகளைப் பரப்பி யவர் சமய குரவர் மூவர். அவர்களுக்குப் பின்னர் அத் தொண்டு செய்தோர் ஒருவரையும் எனக்குத் தெரிய வில்லை. அத் தொண்டை இக்காலத்தில் செய்தவர் ஞானியார் சுவாமிகள். இனி அவர்களின் புனித உடலையும் புன்சிரிப்பையும் எங்ங்ணம் காண்போம்? வாயார வாழ்த்தும் வாழ்த்துரை களையும் வழங்கும் சொற்பொழிவுகளையும் எங்ங்னம் கேட்போம்? அவர்களுக்கு ஞாபகார்த்தமாக ஏதேனும் செய்ய வேண்டுவது மிக அவசியம்.......” இது இராமநாதன் செட்டியாரின் உரை. அடுத்து, புழலை-திருநாவுக்கரசு முதலியாரின் கட்டுரைச் சுருக் கத்தைக் காண்போம்: