பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

கொண்டார். அருளகத்தில் முருகனுக்கும் கோயில் அமைத்து வழிபட்டு வந்தார்.

 இவருக்கு "ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் என்னும் பட்டப் பெயர் வழங்கப்படலாயிற்று. இருப்பினும், இவரை 'ஞானியார் சுவாமிகள்’ என்னும் சுருக்கப் பெயரால் மக்கள் குறிப்பிட்டு வந்தனர். அருளகத்திற்கு 'ஞானியார் மடாலயம்' என்னும் பெயர் வழங்கப்படலா யிற்று.

இவர், அறையணி நல்லூர், சிவ குன்றம், செஞ்சி, திருவண்ணாமலை, திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), சத்திய விசய நகரம், ஆரணி, திருப்பாதிரிப்புலியூர் (புலிசை) ஆகிய இடங்களிலும் அருளகங்கள் (மடாலயங்கள்) அமைத்து அருளாட்சி புரிந்து வந்தார். 'நிட்டாது பூதி சாரம்', 'சண்முகர் அகவல்' முதலிய முப்பத்தொரு நூல்கள் இயற்றியருளினார். இவ்வாறு அரும்பெருந் தொண்டாற்றி வந்த ஆறுமுக அடிகளார், விகுருதி ஆண்டு மாசி-27-வியாழக்கிழமை (கி.பி. 1769, மார்ச்சு) தமது தொண்ணுற்றேழாவது வயதில் உலக வாழ்வை நீத்தார்.

இரண்டாம் பட்டம்:

 இவரை அடுத்து வந்த இரண்டாம் பட்டத்து ஞானி யார் அடிகளார், 'சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் என்னும் பட்டப் பெயர் தாங்கி அருளாட்சி புரிந்து வந்தார். முருகர் அந்தாதி, விநாயகர் மாலை, சுப்பிரமணியர் பதிகம் முதலிய நூல்கள் இவர் இயற்றி னார். அறுபத்து மூன்று ஆண்டுகள் அருளகத் தலைவராய் அருளாட்சிபுரிந்து வந்த இவர், நந்தன ஆண்டு-கார்த்திகைத் திங்கள்-மூன்றாம் செவ்வாய் நாளில் (கி.பி. 1832, டிசம்பர்) வாழ்வு நீத்தார்.