பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 யார் ரீலபூர் சிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் திடீரென உலகை நீத்தமையறிந்து சபையார் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். 18. சைவ சித்தாந்த சங்கம், பூவாளுர் தைப்பூச நன்னாளில் ஒரு திருமுருகன் திருவடி யடைந்த புலிசை உயர்திரு சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளின் ஒப்புயர்வற்ற உபதேச மொழிகளை உன்னிஉன்னிப் பெரிதும் வருந்தி அடிகளார் அடிகளை மிகமிக வாழ்த்துகின்றோம். 19. சைவசித்தாந்த சபை, பழகி நம் தமிழகத்திலே செந்தமிழ் வளர்ச்சியும் சைவ சமய வளர்ச்சியும் கருதிக் கடந்த ஐம்பத்து மூன்று ஆண் டுகளாகப் பெரும் பணி யாற்றியவரும், சமய தீபகராக விளங்கியவருமான திரு அடிகளார் முத்தித் தலமென காசியை மீறிய பழநியங் கிரி என்று அருணகிரி நாத சுவாமிகள் பாராட்டிய இத்தலத்திலே, ஞான தண்டாயுத பாணி சுவாமியின் திருவடியிலே கலந்து இன்புற்றமையைப் பாராட்டியும் துதித்தும் போற்றியும் வழிபாடு செய்தும் கொண்டாடுகிறது சபை. 20. சைவ சித்தாந்த சபை, திருச்சிராப்பள்ளி திருக்கோவலூர் ஆதீனம் திருப்பாதிரிப் புலியூர் பூரீ ஞானியார் மடாலயத்து அதிபரும், சைவ சாத்திர வல்லுநரும், தமிழிலும் வடமொழியிலும் பெரும்புலமை உடையவரும், சைவமும் தமிழும் தழைத்தோங்கச் செய்தலே சைவ மடங்களின் முதன்மையான கடமை என்பதைச் செயலிலும் காட்டி வந்தவரும், சமயம்-மொழி முதலியவை சம்பந்தமான எந்தப் பொருளையும் மிக 'மிகத் தெளிவாகவும்-எத்துணை மணி நேரம் பேசினும்