பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 கேட்போர் சலிப்புறாது விரும்பிக் கேட்கும் வண்ணமும் பேசும் பேராற்றல் படைத்தவரும், தமக்கு உரிய பூசை முதலிய சைவ ஒழுக்கங்களில் சிறிதும் வழுவாதவரும் நமது சபையின் ஆண்டுவிழா-பொன் விழா ஆகிய இவற்றைத் தலைமை தாங்கி மிகச் சிறப்பாக நடத்தி யருளியவரும், நமது கலையின் ஆக்கத்தில் மிக்க கருத்து டையவரும் ஆகிய ரீலழரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவ சாரிய சுவாமிகள் இறைவன் நீழல் அடைந்ததை குறித்து இச்சபையார் பெரிதும் இரங்குகின்றனர். எனினும், அருள் கனிந்த நம் அடிகள் இறைவனோடு இரண்டறக் கலந்த பேரின்பப் பெருவாழ்வு பெற்றிருப்பர் என்பது கொண்டு ஒருவாறு மன அமைதி உறுகின்றனர். 21. பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ச் சங்வம், சென்னை மிகச் சிறந்த அறிஞரும் பெரிய சமயத் தலைவரும் பெருந் தமிழ் நாவலருமாக விளங்கிய உயர்திரு ஞானியார் அடிகள் திடீரென நம்மிடையிருந்து மறைந்தமையால் தமிழ் நாட்டுக்கு உண்டான நஷ்டத்தைக் குறித்து இச் சங்கத்தினர் பெரிதும் வருந்துகின்றனர். 22. சன்மார்க்க சபை, மேலைச் சிவபுரி தமிழ் நாட்டின் தவப் பயனாய்த் தோன்றிச் செந் தமிழ் மொழிக்கும் சைவ சமயத்திற்கும் சிறந்த தொண் டாற்றிப் பெரும் புகழ்பெற்ற திருப்பாதிரிப் புலியூர் ஆதீன முதல்வர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய அடிகள் 1-2-42 அன்று பரிபூரணம் எய்தியது குறித்துச் சன்மார்க்க சபையார் தங்கள் அனுதாபத்தை அந்த ஆதீனத்தில் உள்ளவர்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் தெரிவித்துக் கொள்ளுகின்றனர். 23. கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை திருக் கோவலூர் ஆதீனத்துத் திருப்பாதிரிப் புலியூர்